பழுதான மாருதிக்குப் பதில் புது கார் வழங்க கோர்ட் உத்தரவு
சென்னை:
பழுதான "மாருதி -சென் காருக்கு பதிலாக புதிய காரை வழங்க வேண்டும் அல்லது ரூ. 3 லட்சத்து 62 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என்று மாருதிஉத்யோக் நிறுவனத்திற்கு சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் ரத்தினதுரை. மாருதி சென் கார் வாங்குவதற்காக 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். பின்னர்43 ஆயிரத்து 643 ரூபாய் செலுத்திகாரை பெற்றுக் கொண்டார்.
காரை ஓட்டும் போது தான் அதில் பல கோளாறுகள் இருப்பது தெரிந்தது. இதுபற்றி மாருதி நிறுவனத்திடம் புகார் செய்தார். இரண்டு முறை இலவச சர்வீஸ்செய்தும், கார் சரியாகவில்லை. பின்னர் ஒர்க்ஷாப்புக்கு கொண்டு செல்லப்பட்டு பழுது பார்க்கப்பட்டது. ஆனாலும் அதே கோளாறு நீடித்தது.
காரில் கோளாறு நீங்கவில்லை என்பதால் இதற்கு பதிலாக புதிய கார் வழங்க வேண்டும் அல்லது காருக்கான விலை 3 லட்சத்து 62 ஆயிரத்து 360ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்றும், நஷ்ட ஈடாக ஒரு லட்ச ரூபாயும் தர வேண்டும் என்று மாருதி உத்யோக் மற்றும் யூனியன் மோட்டார் சர்வீஸ்தினங்களுக்கு எதிராக சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் நீதிமன்றத்தில் ரத்தினதுரை வழக்குத் தொடர்ந்தார்.
மாருதி நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கார் தயாரிப்பில் எந்த குறைபாடும் இல்லை. சில குறைபாடுகள் இருப்பது என்பதற்காகவண்டியையே மாற்ற முடியாது என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி கே.ராமசாமி, நீலாவதிபாய் ஆகியோர் தங்கள் தீர்ப்பில், புதிய கார் வாங்கி 6 மாதத்திற்குள் 9 முறை ஒர்க்ஷாப்புக்கு செல்லவேண்டியதாகி விட்டது என்று மனுதாரரின் வக்கீல் குறிப்பிட்டார்.
காரில் ஏற்பட்ட கோளாறு என்ன என்பதை புகழ் பெற்ற நிறுவனங்களான யூனியன் மோட்டார்ஸ், மாருதி உத்யோக் ஆகியவற்றால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
மூன்று ஆண்டுகளாகியும் கோளாறை கண்டுபிடித்து சரி செய்ய முடியவில்லை. எனவே மனுதாரருக்கு பழைய காரை ஒப்படைத்த பிறகு புதிய மாருதி சென் காரைவழங்க வேண்டும். அல்லது ரூ. 3 லட்சத்து 62 ஆயிரத்து 360-ஐ வழங்க வேண்டும்.
அதோடு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு தரவேண்டும். வழக்குச் லெவுத் தொகையாக ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications