ஏர் இந்தியா பங்குகளை வாங்க டாடா விருப்பம்
மும்பை:
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க விருப்பமாக உள்ளதாக டாடாநிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏர்இந்தியாவின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசுதெரிவித்ததுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏர் இந்தியா பங்குகள் விற்கப்படும்போது அதை வாங்க டாடா குழுமம் ஆர்வத்துடன்உள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில்மகிழ்ச்சியடைகிறோம்.
முன்னதாக, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று வியாழக்கிழமை மத்திய அரசுஅறிவிப்பு வெளியிட்டது. இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்லது நிறுவனங்கள்,ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளைப் பெறலாம் என்று அரசு அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் 26 சதவீத பங்குகளை அரசே வைத்திருக்கும். இதை 25 சதவீதமாககுறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications