"இந்தியன் ஆயில் நிறுவன உற்பத்தி 2 மடங்கு அதிகரிக்கும்
கோவை:
அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் உற்பத்தித் திறன் இரண்டுமடங்காக அதிகரிக்கும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இயக்குநர்(பைப்லைன்) எஸ்.என் ஜா தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் எஸ்.என்.ஜா கூறியதாவது:
அடுத்து வரும் சர்வதேச தாராளமயமாக்கலின்போது ஏற்படும் சவால்களைச் சமாளிக்கஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நவீனமயமாக்கலில் இறங்கியுள்ளது.
பொதுவாக, அந்நிய நாட்டு நிறுவனங்கள், பெட்ரோல் அவுட்லெட் நிறுவும்போது,சரியான அளவு, தரம் மற்றும் சிறப்பான சேவை ஆகியவற்றை அளிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதுபற்றிய விழிப்புணர்வை நாடு ழுவதிலும் உள்ளஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் டீலர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம்.
தற்போது ஆண்டுக்கு 34.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்சுத்திகரிக்கப்படுகிறது. இது அடுத்த 2003ம் ஆண்டில் 64 மில்லியின் மெட்ரிக் டன்னாகஉயர்த்தப்படும். இதற்காக 9 வது ஐந்தாண்டு திட்டத்தில், 24 ஆயிரம் கோடி ரூபாயும்,10வது ஐந்தாண்டு திட்டத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடுசெய்யப்படவுள்ளது.
அடுத்த ன்றாண்டுகளில் 43. 5மில்லியன் மெட்ரிக் டன் எரிபொருள் பைப் லைன் மூலம்எடுத்துச் செல்லப்படும். குஜராத்தில் உள்ள சலாயா என்ற இடத்திலிருந்து மதுராவழியாக பானிபட்டிற்கு பைப் லைன் பதிக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பைப்லைனுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். 2003ம் ஆண்டில் இப்பணிமுடிவடையும் என்றார்.
பின்னர், உலக மயமாக்கல் மற்றும் தொழிற்சாலை இன்ஜினியரிங்கில் சர்வதே வர்த்தகஒப்பந்தந்தம் (டபிள்யூடிஓ) ஏற்படுத்தும் மாறுதல்கள் குறித்த கருத்தரங்கில் ஜாபேசுகையில், சர்வதேசப் பொருளாதாரத் தாராளமயமாக்கலின்போது ஏற்படக் கூடியமாற்றங்களை எதிர்நோக்க இந்தியன் ஆயில் தயாராகியுள்ளது. இதற்கென கம்ப்யூட்டர்சாஃப்ட்வேர் தயாராகியுள்ளது என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலர் ஏ.பிவெங்கடேஸ்வரனும் பேசினார். இவர் தவிர, கோவை கிளையின் துணைச் சேர்மன்நடராஜன்,
தேசிய கவுன்சிலின் சேர்மன் ஏ.கே புந்திர் ஆகியோரும் பேசினர்.
பாரதிய வித்யாபவன் சேர்மன் டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் துவக்கி வைத்துப்பேசினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications