வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்தார் உதவி டைரக்டர் நாகப்பா
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியில் 61 நாட்களாக இருந்து வந்த கன்னடத் திரைப்படஉதவி இயக்குநர் நாகப்பா காட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அவர் வீரப்பன்பிடியிலிருந்து தப்பி வந்துவிட்டாரா அல்லது வீரப்பனே அவரை விடுவித்து விட்டானாஎன்பது உறுதியாகத் தெரியவில்லை.
கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி ஈரோடு மாவட்டம் தொட்டகாஜனூரிலுள்ள தோட்டவீட்டிலிருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட நான்கு பேரை வீரப்பன் கும்பல்கடத்திச் சென்றது. அதற்குப் பிறகு பலமுறை அவர்களை விடுவிப்பது தொடர்பாககோபால் மூலம் தமிழக, கர்நாடக அரசுகள் பேச்சு நடத்தி வந்தன. ஆனால் இதற்குஎந்தப் பலனும் இருக்கவில்லை.
இந்த நிலையில் ராஜ்குமாருடன் சேர்த்துக் கடத்தப்பட்டிருந்த சினிமா உதவி இயக்குநர்நாகப்பா காஜனூர் வியாழக்கிழமை இரவு காஜனூர் வந்து சேர்ந்துள்ளார். அவர் தப்பிவந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக குழப்பமும்நிலவுகிறது.
நாகப்பா காட்டிலிருந்து வந்த செய்தியை கர்நாடக டி.ஜி.பி. தினகரும்உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக விசாரிக்க சாம்ராஜ்நகர் எஸ்.பி. அண்ணேகவுடாவைப் பணித்தார். விசாரணையில் நாகப்பா காட்டிலிருந்து வந்தது உறுதியானது.
காஜனூர் வந்த நாகப்பா, வெள்ளிக்கிழமை காலை பெங்களூர் வருவார் என்றுகூறப்படுகிறது. பெங்களூர் வரும் அவர் முதல்வர் கிருஷ்ணாவைச் சந்திப்பார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. நாகப்பா பெங்களூர் வந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்கஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முன்னாக காஜனூர் வந்த நாகப்பா அங்குள்ள ராஜ்குமார் வீட்டுக்கு வந்தார். அங்குகுழுமியிருந்த ராஜ்குமார் உறவினர்களுக்கு நாகப்பாவை பார்த்ததும் ஆச்சரியம்ஏற்பட்டது. உடனே அவர்களிடம் தான் காட்டிலிருந்த வந்த கதையை விவரித்ததார்.
நாகப்பா உறவினர்களிடம் கூறுகையில், வீரப்பனிடமிருந்து அதிகாலை 2 மணிக்குத்தப்பினேன். பின்னர் காரைக்குறிச்சி என்ற இடத்துக்கு வந்தேன். பவானிசாகருக்குநடந்து வந்து பன்னாரி, சத்தியமங்கலம் வழியாக தலைமலை என்ற இடத்துக்கு வந்துசேர்ந்தேன்.
தலைமலையிலிருந்து தாளவாடிக்கு பஸ்சில் வந்தேன். பிறகு காஜனூருக்கு வந்துசேர்ந்தேன். நான் தப்பியுள்ளதால் ராஜ்குமாருக்கு ஆபத்து ஏற்படலாம். ராஜ்குமாரைமீட்பது தொடர்பாக கோபால் பேச்சு நடத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களில்அவர் விடுதலையாகலாம் என்றார் நாகப்பா.
தப்பினரா அல்லது விடுவிக்கப்பட்டாரா?
இதற்கிடையே நாகப்பா தப்பி வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு கருத்துஎழுந்துள்ளது. நாகப்பாவுக்கு நீரிழிவு நோய் இருப்பதால் அவரது உடல் நலம் கருதிவீரப்பனே, நாகப்பாவை காட்டிலிருந்து விடுவித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இருப்பினும், நாகப்பாவின் கண்களில் உள்ள காயம், அவரது முன்பற்கள் இரண்டுஉடைந்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை தப்பி வந்திருக்கலாம் என்றுகருத வாய்ப்புள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications