தென்ஆப்ரிக்காவில் ஆயுதம் வாங்கப் போனாரா பெர்னாண்டஸ்?
டர்பன்:
இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்காக, தென்ஆப்பிரிக்கா வரவில்லை என்று டர்பனில் வியாழக்கிழமை பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
தென்ஆப்பிரிக்காவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு இந்தியா திரும்பும் வழியில் டர்பனில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனது தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மிகவும் இனிதாக முடிந்தது. இங்கு கல்வி, சமூக, கலாச்சார, அரசியல், மத அமைப்புத் தலைவர்களையும், இங்குவாழும் இந்தியர்களையும் சந்தித்துப் பேசினேன்.
தென்ஆப்பிரிக்காவில் அனைத்து வகையான ஆயுதங்களும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இதில் எதையும் வாங்குவதற்காக நான் தென்ஆப்பிரிக்காவரவில்லை.
இருப்பினும், இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் சேர்ந்து ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தென்ஆப்பிரிக்கபாதுகாப்பு அமைச்சர் மொசியோயா லெகோடா தலைமையில் கையெழுத்தானது.
இந்தியாவும் எதிர்காலத்தில் ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும். இவை பிற நாடுகளுக்கு விற்பனை செய்யும் வகையில் இருக்கும். இந்தியாவில் மிகப்பெரியவிஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநகர்கள் இருக்கிறார்கள்.
பல துறைகளில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறையில் இரண்டுநாடுகளுக்கும் பயன்பெறும் வகையில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications