16.09 கோடியில் நவீனமயமாகும் விசைத்தறி மையங்கள்
கோவை:
இந்தியாவில் உள்ள 21 விசைத்தறி மையங்கள் 16.09 கோடி ரூபாய் செலவில்நவீனமயமாக்கப்படும் என கோவையில் இந்திய டெக்ஸ்டைல் கூடுதல் கமிஷனர் தீபக்ஷெட்டி கூறினார்.
திருப்பூர் அருகே நடந்த கருத்தரங்கில் இந்திய டெக்ஸ்டைல் கூடுதல் கமிஷனர் தீபக்ஷெட்டி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
ஜவுளி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை விரைவில்தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது குறித்து சிறுதொழில்கள் வளர்ச்சிவங்கி (சிட்பி) யுடன் வரும் அக்டோபர் 9----ம் தேதி மும்பையில் ஆலோசனைநடக்கவுள்ளது. இதில், இந்த நிதியுதவியை மில்களுக்கு வழங்கும் விதிமுறைகளில்மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்படும்.
ஜவுளி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்துவதில் எழும் சிக்கல்கள் குறித்துதொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த ஆலோசனையின்போதுகூறப்பட்ட குறைகளை ஆராயப்பட்டது.
முதலாவதாக இந்த நிதியுதவியை வழங்க முன்வந்த வங்கிகள் மிகவும் குறைவே.தமிழ்நாட்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதியுதவியை வழங்க முன் வந்தது.
இந்த வங்கியின் வணிக மையங்கள் மூலம் மட்டுமே இந்த நிதியை வழங்க முடியும்என வங்கி கூறியது. ஆனால், இந்த வங்கியில் குறைந்தபட்ச கையாளும் தொகையேரூ. 50 லட்சமாக இருந்ததால், இந்த நிதி, நடுத்தர மற்றும் சிறிய தொழிற்சங்கங்கள்பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
சிறுதொழில் வளர்ச்சி வங்கி தனது கூட்டுறவுக் கிளைகள் மூலம் விநியோகிக்க முடிவுசெய்தபோது 134 கிளைகளில், 3 கிளைகள் மட்டுமே இதனைச் செயல்படுத்தமுன்வந்தது. இதில் இரண்டு மட்டுமே தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே,இதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும்.
இந்தியா முழுவதிலும் உள்ள 44 விசைத்தறி மையங்களில் 21 மையங்கள்நவீனமயமாக்கப்படும். இதற்கென மத்திய அரசு ரூ. 16.09 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்துள்ளது. இந்த மையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர் டிசைன்களை உருவாக்கக்கூடியவையாக செயல்படும். ஒவ்வொரு மையத்திற்கும் 5 கம்ப்யூட்டர்கள்வழங்கப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications