"ஒன்றும் இல்லாமல் கிரிக்கெட் ஆடுகிறார்கள்!
லண்டன்:
லண்டனில் ஒன்றுமே இல்லாமல் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?
இவ்வளவு நாளும் கிரிக்கெட்டை மேட்ச் பிக்ஸிங் படாத பாடு படுத்தியது.இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது. இப்போது புதிதாக ஒரு விஷயம் கிரிக்கெட்உலகைக் கலக்கி வருகிறது.
ஜெப் பாய்காட் என்ற அருமையான கிரிக்கெட் வீரரை உலகுக்குத் தந்த யார்க்ஷயர்நகரில் புதிதாக ஒரு கிரிக்கெட் விளையாடப்படுகிறது. அதென்ன புதிது என்கிறீர்களா?
வேறொன்றும் இல்லை. இந்தக் கிரிக்கெட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் ஆடைஅணிவதில்லை. இல்கியிலுள்ள பென் ரிட்டிங் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்தவீரர்கள்தான் இந்தக் கிரிக்கெட்டை விளையாடி வருபவர்கள்.
கடந்த வாரம் "இப்படி நடக்கவிருந்த ஒரு போட்டியை போலீஸார் தலையிட்டுத்தடுத்தார்கள். இரவு நேரத்தில் மெல்லிய வெளிச்சத்தில் இந்தப் போட்டிநடக்கவிருந்தது.இதைப் பார்த்த பக்கத்து குடியிருப்பில் வசித்தவர் போலீசுக்குத் தகவல்கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து போட்டியைத் தடுத்தனர்.
போலீஸாரைப் பார்த்தும் "மொட்டையாக நின்று கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தவர்கள் அவிழ்த்து வைத்திருந்த ஆடைகளை எடுத்துக் கொண்ட ஓடமுயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்து அறிவுரை கூறி அனுப்பினர்.
மொத்தம் 18 பேர் இப்படி விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களில் நான்கு பேர்போலீஸார் வந்தபோது ஆடையில்லாமல் விளையாடியதாக போலீஸ் தரப்பில்தெரிவிக்கப்பட்டது. போட்டிக்கான நடுவர் மட்டும் ஆடையுடன் இருந்தார். ரொம்பக்குளிராக இருந்ததால் அவருக்கு மட்டும் விதி விலக்கு தரப்பட்டிருந்தது.
ஒரு மணி நேரம் வரை இந்த நிர்வாண கிரிக்கெட் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.கிளப்பின் கேப்டன் ஆண்ட்ரூ ஜென்னிங்ஸ் கூறுகையில், ஆடையில்லாமல்விளையாடியதில் தவறில்லை. இது வெறும் விளையாட்டுதான். வழியில்சென்றவர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் இது இருந்தது என்றார்.
நல்ல விளையாட்டுதான்!
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications