சந்திரிகா திடீர் வெளிநாடு பயணம்
கேள்வி - பதில்
கே: எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் இரு தரப்பு வாதங்களையும் துக்ளக்கில் வெளியிடும் தாங்கள், வீரப்பன்தரப்பு வாதத்தை ஏன் வெளியிடுவதில்லை?
ப: ஆட்டோ சங்கர் தரப்பு வாதம் கூடத்தான் வெளியிடப்படவில்லை. அந்த மாதிரிதான் இதுவும்.
கே: கலைஞருக்குப் பின் ஸ்டாலின் முதல்வர் ; ஸ்டாலினுக்குப் பின் அவர் மகன் முதல்வர் ; அவருக்குப் பிறகு அவரது மகன் முதல்வர்-- என்று சென்னையில் நடந்த முப்பெரும் விழாவில் அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளாரே?
ப: தன்னுடைய ஆதங்கத்தை இதற்கு மேல் தெளிவாக அவர் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல.
கே: எல்லா அரசியல் தலைவர்களையும் விமர்சனம் செய்கிறீர்களே? பிறகு யார்தான் யோக்கியம் என்று எண்ணுகிறீர்கள்?
ப: ஏதோ ஒரு சிலர் தேறுவார்கள். ஆனால் அவர்களுக்கு மக்கள் ஆதரவு பெரிய அளவில் கிட்டுவதில்லை.
கே: கழுதை கெட்டால் குட்டிச்சுவர் ; அரசியல்வாதி கெட்டால் ...?
ப: ராஜ்பவன்.
கே: பிரதமர் வாஜ்பாயின் அமெரிக்க பயணம் இந்திய - அமெரிக்க நல்லுறவு, அந்நிய முதலீடு, வர்த்தகம், தீவிரவாத ஒழிப்பு -போன்றவை எந்த வகையில் முன்னேறும்?
ப: நீங்கள் குறிப்பிட்ட எல்லா அம்சங்களிலுமே நல்ல முன்னேற்றம் காணப்படும் என்றுதான் நினைக்கிறேன். அந்த திசையைநோக்கித்தான் பயணம் தொடங்கப்பட்டிருக்கிறது.
கே: ஒரு மனிதனின் சகிப்புத்தன்மை எப்படி இருக்க வேண்டும்?
ப: சகிப்புத்தன்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம், உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் என்ன, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்தலைவரா?
கே: திராவிடக் கொள்கைகளுக்கும், மதச்சார்பின்மை கொள்கைக்கும் என்ன வேறுபாடு?
ப: மத அடிப்படையில் எந்த ஒரு பிரிவுக்கும் சலுகையும் தரப்படக்கூடாது; விதிக்கப்படக் கூடாது - இது மதச்சார்பின்மை. இந்துமதத்தை நசுக்கி, மற்ற மதங்களைப் போற்ற வேண்டும் - இவை திராவிடக் கழகங்களின் கொள்கை.
கே: ஆபீஸ் என்றாலே தூங்குமிடம் என்றாகி விட்டதற்குக் காரணம் யார்?
ப: பொதுத்துறைகளின் சாதனைகளில் இதுவும் ஒன்று.
கே: தலைவன் வழியில் சென்று, தொண்டன் கடைசியில் சந்திப்பது எது?
ப: தொண்டன் எதை சந்திக்கிறானோ, இல்லையோ - எந்த தலைவனுக்காக உழைத்தானோ, அநதத் தலைவனைச் சந்திப்பது என்பதுமட்டும் நடக்காது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications