படிக்கட்டில் உற்சாகம் .. பஸ்சிலிருந்து விழுந்து வாலிபர் பலி
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் மீது கண்டனத்துக்குரிய ஒரு தாக்குதல் முயற்சி - இதற்கு பதிலடி, பல இடங்களில் பஸ் எரிப்பு ;முதல்வர் மகன் அழகிரி மீது தி.மு.க. நடவடிக்கை - இதற்கு எதிரடி, மதுரையில் பஸ்கள் எரிப்பு ; ஜெயலலிதா வழக்கில் அவருக்குஎதிராக தீர்ப்பு - இதற்குச் சவால், தர்மபுரியில் மனிதர்களோடு பஸ் எரிப்பு ; சென்னையில் மாணவர்களுக்குக் கோபம் - பஸ்கள் மீதுகல்வீச்சு. இப்படி எந்த ஒரு எதிர்ப்புத் தெரிவிக்க நினைத்தாலும் சரி - பலியாவது பொதுச் சொத்துதான் ; அதுவும் குறிப்பாக பஸ்கள்தான்.
தொடர்ந்து நடந்து வருகிற இந்த அராஜகத்திற்கு அரசு அவ்வப்போது ஆட்சேபம் தெரிவித்து, எச்சகரிக்கை விட்டுவிடும்.பா.ம.க.வினர் பஸ் எரித்த போதும் எச்சரிக்கை விடப்பட்டது.
சிலர் கைதாகியிருக்கிறார்கள். வழக்கு நடக்குமா? எப்படி நடக்கும்? குற்றம் செய்தவர்கள் தண்டனைக்குள்ளாவார்களா ?என்றெல்லாம் கேட்டுப் பயனில்லை.
இது சட்டத்தைப் பொறுத்த விஷயமல்ல. ஆளும் கட்சிக்கும், பா.ம.க.வுக்கும் நிலவக் கூடிய உறவு முறையைப் பொறுத்த விஷயம்.
அரசுக்கு வேண்டாதவர் ஜெயலலிதா என்பதால், அவருடைய ஆதரவாளர்களின் பஸ் எரிப்பு அராஜகம் தண்டனைக்குள்ளாகும்.
அழகிரி சமாச்சாரம் வேறு. மதுரையில் பஸ்கள் எரிக்கப்பட்ட நிலையில் இது உட்கட்சி விவகாரம் என்று முதல்வர்கூறிவிட்டார். அப்படி என்றால் என்ன அர்த்தமோ தெரியவில்லை.
பஸ் எரிப்பு பற்றி தி.மு.க. தனது அடுத்த செயற்குழு கூட்டத்தில், கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி, இத்துடன் இந்த உட்கட்சிபிரச்சனை தீர்ந்தது என்று அறிவித்து விடுமோ என்னவோ!
மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றாலோ, சட்டம் தானாக ஒதுங்கிக் கொள்கிறது.எச்சரிக்கை கூட, அரசிடமிருந்துஇல்லாமல், போலீஸ் அதிகாரியிடமிருந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications