வாண வேடிக்கைகளுடன் நிறைவு பெறுகிறது சிட்னி ஒலிம்பிக்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டி மிகப் பெரிய வாணவேடிக்கைகளுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற உள்ளது.

உலகின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டிகள் 1896-ம் ஆண்டு கிரீஸ்நாட்டில் ஏதென்ஸ் நகரில் முதல்முதலாக நடத்தப்பட்டன.

அதற்குப் பிறகு பல நாடுகளில் பல நகரங்களில் இப் போட்டிகள் நடத்தப்பட்டன. இடையில் முதல்மற்றும் இரண்டாம் உலகப் போர்களால் 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தமுடியாமல் போயின.

இப்போது சிட்னியில் நடைபெற்றது 27-வது ஒலிம்பிக் போட்டியாகும். தொடக்க காலத்தில்இங்கிலாந்துதான் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

ஆனால், ஒலிம்பிக் போட்டியில் இப்போதைய உலகின் வல்லரசு நாடுகளாக விளங்கும்அமெரிக்காவும், ரஷ்யாவும் கலந்து கொள்ளத் தொடங்கிய பிறகு அந்த இரு நாடுகளுக்கும்தான்பதக்கப் பட்டியலில் யார் முதலிடம் பெறுவது என்ற போட்டி நிலவி வருகிறது.

இடையில் இரு நாடுகளுக்கும் இடையேயான வல்லரசுப் போட்டி காரணமாக சில ஒலிம்பிக்போட்டிகளில் இரு நாடுகளும் கலந்து கொள்வதைத் தவிர்த்தன. மற்றபடி அமெரிக்கா, ரஷ்யா தவிரபொதுவான நாடுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இரு நாடுகளும் கலந்து கொண்டன.

இப்போது சிட்னி ஒலிம்பிக் ஏறக்குறைய முடிவு பெறும் நிலைக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரே ஒருநாள் தான் உள்ளது. கடைசி நாளான அக்டோபர் 1-ம் தேதி 24 தங்கப் பதக்கங்களுக்கானபோட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் போட்டியின் 15-ம் நாள் முடிவில் அமெரிக்கா 38 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில்உள்ளது. இரண்டாவது இடத்தில் 28 தங்கங்களுடன் ரஷ்யாவும் 3-ம் இடத்தில் 28 தங்கங்களுடன்சீனாவும் உள்ளன.

முதலிடத்துக்கு அமெரிக்காவுடன் போட்டியிட வேறு நாடுகள் இல்லை. ஆனால், இரண்டாவதுஇடத்தைப் பெறுவதில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

ஒலிம்பிக் போட்டியின் கடைசிப் போட்டியாக ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெறும். அப்போட்டி முடிந்த பிறகு நிறைவு விழா நிகழ்ச்சிகள் தொடங்கும்.

கலைநிகழ்ச்சிகளுக்குப் பிறகு இந்த சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட 199 நாடுகளின் வீரர்மற்றும் வீராங்கனைகள் தாங்கள் வென்ற பதக்கங்களுடன் அணிவகுத்து வருவார்கள். அதற்குப்பிறகு வாண வேடிக்கைகள் நடத்தப்படும்.

இந் நிலையில், ஒலிம்பிக் தொடக்க விழாவை சிறப்பாக நடத்தி உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றசிட்னி, நிறைவு விழாவையும் சிறப்பாக நடத்தி சாதனை படைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதுவரை எந்த ஒலிம்பிக் போட்டியிலும் செய்யாத மிகச் சிறந்த அதே அளவில் மிகப் பெரிய அளவிலானவாண வேடிக்கைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு ரிவர் ஆஃப் லைட்னிங் என்று பெயரிடப்பட்டுள்ளது. பல மணிநேரத்துக்கு வண்ண வண்ண வாண வேடிக்கைகள் நடத்தப்படவுள்ளன.

இந்த மில்லேனியம் ஆண்டு தொடக்கியபோது சிட்னியில் நடத்தப்பட்ட வாண வேடிக்கைகளை விட 40சதவீதம் அதிகமாக, பெரியதாக இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி இருக்கும் என்று நிகழ்ச்சிஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வாண வேடிக்கைகளை சிட்னி துறைமுக பாலத்துக்கு அருகில் இருந்து சுமார் 20 லட்சம் பேர்கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிகழ்ச்சியை மக்கள் இன்னும் நன்றாகப் பார்த்துரசிக்கும் வகையில் 16 பெரிய டிவி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்ச்சியை பல சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடியாக ஒளிபரப்ப உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+