பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெ., மூப்பனார் கண்டனம்
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா, மூப்பனார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விலை உயர்வைகைவிடும் படி அவர்கள் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை வேட்டைக்காடாக திறந்து விட்டு விட்டு ஏழை எளிய நடுத்தரமக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் சமையல் வாயு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின்விலையை கடுமையாக உயர்த்தியுள்ள மக்கள் விரோத பாஜக ஆட்சியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆண்டு தோறும் வருகிற திருவிழா போலசமையல் வாயு, பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆட்சியில் இடம் பெற்றிருக்கிற திமுக ஒவ்வொரு முறையும் இந்த விலை உயர்வை நியாயப்படுத்தி,வக்காலத்து வாங்குவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுளளார்.
தமாகா தலைவர் மூப்பனார் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோலிய பொருட்கள் விலையை அரசு உயர்த்திஇருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வால் மற்ற பொருட்கள் விலையும் உயரும். ஏற்கனவே இந்தஆட்சியில் 3 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் மண்ணெண்ணெய் விலையையும் மத்திய அரசுஉயர்த்தியிருப்பது மிகவும் வேதனையானது.
இதையெல்லாம் மத்தியில் அங்கம் வகிக்கும் திமுக அரசு கண்டும் காணாததுபோல் தூங்குகிறது. தமிழக மக்கள்நலனை திமு கவும், அதோடு கூட்டு சேர்ந்துள்ள பாஜகவும் துளியும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகின்றனஎன்று கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications