விருந்துக்கு ஜெ. என்னை அழைக்கவில்லை .. இளங்கோவன்
சென்னை:
ஜெயலலிதா அளித்த விருந்துக்கு என்னை அழைக்கவில்லை என்று தமிழக காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் இளங்கோவன் அளித்த பேட்டி:
மதுரையில் சமீபத்தில் நடந்த வன்முறையில் பஸ்கள் எரிக்கப்பட்டன. இதை உள்கட்சிவிவகாரம் என்று முதல்வர் கருணாநிதி சொல்வதை ஏற்க முடியாது.
நம்பிக்கைத் துரோகம், நன்றி மறப்பதும் தான் காங்கிரஸ் கலாச்சாரம் என்று கருணாநிதிகூறியுள்ளார். 1971ல் காங்கிரசால் தான் அவர் முதல்வர் ஆனார் என்பதை மறந்து விடவேண்டாம்.
கருணாநிதி பற்றியும், திமுக தலைவர்கள் பற்றியும் பெரியார் பக்கம் பக்கமாக எழுதிவைத்திருப்பதையும் அவர் மறந்து விட வேண்டாம்.
அதிமுகவுடன் எங்களுக்கு இருந்த பிரச்னைகள் தீர்ந்து விட்டது. கடந்த வாரம்ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா திறமையாகசெயல்படுகிறார் என்று கூறியுள்ளார். எனவே எங்களுக்குள் இருந்த பிரச்னை முடிந்துவிட்டது.
பெரியார் விழா நடத்திய போது கூட்டணித் தலைவர்களுக்கு ஜெயலலிதா அளித்தவிருந்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. எனவே நான் கலந்து கொள்ளவில்லை.எங்கள் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத்தை அழைத்திருந்தார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழக காங்கிரசுக்கு விரைவில்கட்சித் தேர்தல் நடக்கவுள்ளது. தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவேன். ஜனநாயகரீதியில் போட்டி இருக்கும்.
தமிழக காங்கிரஸ் சார்பில் சோனியாவை அழைத்து விரைவில் பொதுக் கூட்டம் நடத்ததிட்டமிட்டுள்ளோம். திருச்சி லோக்சபா இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்என்றார் இளங்கோவன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications