காட்டுக்குள் அதிரடிப்படை செல்லுமா? டி.ஜி.பி. பேட்டி
சென்னை:
வீரப்பன் காட்டிற்குள் அதிரடிப்படையை அனுப்பும் அளவுக்கு நிலைமைமோசமாகவில்லை என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சர்மா தெரிவித்தார்.
வீரப்பன் விவகாரம் தொடர்பாக சென்னையில் சனிக் கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: ராஜ்குமாரை மீட்க 4வது முறையாக காட்டுக்கு சென்ற அரசு தூதர் கோபால்வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளதை தோல்வி என்று எண்ணுகிறீர்களா?
பதில்: தோல்வி என்று கூறமுடியாது. இன்னும் பேச்சுவார்த்தை தொடரவிருக்கிறது.ஒவ்வொரு முறையும் வீரப்பன் ஒரு கோரிக்கையை வலியுறுத்துகிறான். அவற்றைபற்றி கோபால் வீரப்பனிடம் விளக்க வேண்டியதிருக்கிறது. எனவே தான் தாமதம்.
கேள்வி: ராஜ்குமார் மீட்பு விவகாரம் எந்த நிலையில் இருக்கிறது?
பதில்: இரு மாநில அரசுகளும் சில முடிவுகளை எடுத்து அதன் படி நடவடிக்கைமேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் எதுவும் சொல்வதற்கில்லை.
கேள்வி: ராஜ்குமாரை பேச்சுவார்த்தை மூலம் மீட்க முடியாது போல் தெரிகிறதே.அதிரடிப்படையை அனுப்புவீர்களா?
பதில்: அந்த அளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை. இது ஒருஉணர்ச்சிபூர்வமான பிரச்னை. இதை நிதானமாகத்தான் கையாள வேண்டும்.
கேள்வி: கோபால் முயற்சி வெற்றி பெறாததால் புதிய தூதராக வக்கீல்வேணுகோபாலை அனுப்புவீர்களா?
பதில்: கோபால் நடத்திய பேச்சு தோல்வி என்று கூற முடியாது. மேலும் தூதர் மாற்றம்என்பது இரு மாநில அரசுகளும் சேர்ந்து எடுக்கும் முடிவு என்றார் சர்மா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications