பாமாயிலுக்குத் தடை கோருகிறார்கள் தென்னை வியாபாரிகள்
கோவை:
சமையல் எண்ணெய்க்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது இறக்குமதிக்கு 300 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லத்துரை கூறினார்.
கோவையில் சனிக்கிழமை தென்னை வாரிய உறுப்பினரும், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவருமான செல்லத்துரை நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
பாமாயில் இறக்குமதியால் தமிழக விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த சமையல் எண்ணெய் மலிவு விலையில் கிடைப்பதால், தேங்காய்விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி
இருக்கின்றனர். எனவே, இதனைத் தடுக்க பாமாயில் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும். அல்லது இந்த எண்ணெய் இறக்குமதிக்கு 300 சதவீதம்வரி விதிக்க வேண்டும்.
சர்க்கரை இறக்குமதிக்கு வரி விதித்ததன் விளைவாக ஓரளவு விவசாயிகளுக்கு கரும்பு விலை கட்டுபடியாகும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சர்க்கரைஇறக்குமதிக்கு 20 சதவீதத்திலிருந்து 60 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் விவசாயிகள் விற்பனை செய்ய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தையைப் போல அதிக அளவு உற்பத்தியாகும்காய்கறியை விற்பனை செய்ய ஒட்டன்சத்திரத்தில் ரூ. 2.5 கோடி செலவில் உழவர் பெருஞ் சந்தை அமைக்க முதல்வர் கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார்.இதற்கென இங்கு 16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவக்கப்படவுள்ளன.
இது தவிர, விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மின் இணைப்பு வழங்க "கறுப்பு பகுதியாகஅறிவிக்கப்பட்ட இடங்கள், தற்போது மாற்றப்பட்டு விட்டது. இந்தப் பகுதியிலும் மின்சாரம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது என்று செல்லத்துரைகூறினார்.
பேட்டியின்போது கட்சியின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி உடனிருந்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications