காரியத்தைக் கெடுத்துவிட்டார் நாகப்பா .. கோபால் குற்றச்சாட்டு
சென்னை:
ராஜ்குமாரை விடுவிக்க அனைத்தும் தயாரான நிலையில் நாகப்பா தப்பி வந்து காரியத்தைக் கெடுத்து விட்டார் என்று அரசுத் தூதராக வீரப்பனிடம்சென்று வெறும் கையுடன் திரும்பிய நக்கீரன் கோபால் கூறியுள்ளார்.
காட்டில் வீரப்பன் பிடியில் பிணைக் கைதியாக இருந்த நாகப்பா திடீரென்று தப்பி ஓடி வந்து விட்டதை அடுத்து வீரப்பனும், அவனது கூட்டாளிகளும்கோபமடைந்துள்ளனர். இதனால் வீரப்பன் - அரசு தூதர் பேச்சுவார்த்தை தடைப்பட்டது. ராஜ்குமாருடன் 2ம் தேதி திரும்பவிருந்த அரசு தூதர்கோபால் வெறுங்கையுடன் சென்னை திரும்பினார்.
சென்னையில் சனிக்கிழமை காலை தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து அவர் பேசினார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, பேச்சுவார்த்தைநல்ல முறையில் நடந்து ராஜ்குமாரும் மற்றவர்களையும் விடுவிக்க வீரப்பன் முன் வந்துள்ள நேரத்தில் இப்படி நாகப்பா தப்பி வந்து விட்டார். இதனால்வீரப்பன் தனது இருப்பிடத்தை மாற்றி விட்டான்.
மலை அடிவாரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த வீரப்பன், இப்போது மேலும் 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அடர்ந்தகாட்டுக்குள் சென்று விட்டான். இதற்கு காரணம் நாகப்பா தப்பியதன் மூலம், அவனுக்கு சந்தேகம் வந்து விட்டது. போலீஸார் உள்ளே புகுந்துவிடுவார்களோ என்ற சந்தேகத்தில் இருப்பிடத்தை யாரும் நெருங்க முடியாத தூரத்திற்கு மாற்றி விட்டான் என்று கோபால் தெரிவித்துள்ளார்.
நாகப்பா தப்பி ஓடி வந்த சம்பவத்தையும் அவர் முதல்வரிடம் விளக்கியுள்ளார். அதிகாலை 2.30 மணியளவில் "பாத் ரூம் போக வேண்டும் என்று நாகப்பாஎழுந்துள்ளார். உடனே லாரன்ஸ் என்பவர் துணைக்கு சென்றுள்ளார். அவருக்குத் தெரியாமல் தப்பி ஓடி வந்துள்ளார். அவர் காடுமேடெல்லாம் சுற்றிவந்திருக்கவே தேவையில்லை.
அவர்கள் எல்லோரையும் 2ம் தேதி விடுவிக்க வீரப்பன் தயாராக தான் இருந்தான். ஆனால், நாகப்பா தப்பியதால் முதல்வரை சந்தித்த பின்னர்,நக்கீரன் கோபால் நிருபர்களிடம் கூறுகையில், ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாகப்பா தப்பியதால் வீரப்பன் கும்பலிடம்பேச்சுவார்த்தையை தொடர முடியவில்லை. அவர்கள் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதனால் நீங்கள் யோசித்து தகவல் சொல்லுங்கள்.மறுபடியும் வருகிறேன் என்று கூறி விட்டு வந்து விட்டேன் என்றார்.
முதல்வர் கருணாநதி செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்பிரச்னையில் சின்ன பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை. வீரப்பனிடம் இருந்து மீண்டும் சிக்னல்கிடைத்ததும் நக்கீரன் கோபால் செல்வார். உச்ச நீதிமன்ற வழக்கு விவரங்கள் எல்லாம் நமக்கு சாதகமாக இருந்தன என்றும், மத்திய அரசு கூடதீவிரவாதிகள் விடுதலையை எதிர்க்கவில்லை என்றும் வீரப்பனிடம் அரசு தூதர் விளக்கியுள்ளார்.
அதனால் அவன் மனம் மாறி ராஜ்குமாரையும், மற்றவர்களையும் விடுவிக்க முன் வரும் நேரத்தில் இப்படி தடை ஏற்பட்டு விட்டது என்றார்.
இந்த முறை காட்டிற்குச் சென்று வந்துள்ள நக்கீரன் கோபாலுக்கும் உடலில் சில இடங்களில் காயம் உள்ளது. முற்செடிகள் நிறைந்த காட்டிற்குள் மழைநேரத்தில் புகுந்து சென்றதால் ஏற்பட்ட காயங்கள் என்று அதற்கு நக்கீரன் அலுவலகம் விளக்கம் அளித்தது.
ராஜ்குமாரையும், மற்றவர்களையும் மீட்க வாகனங்கள் வரை தயார் செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்குள் நாகப்பா தப்பி வந்து காரியத்தை கெடுத்துவிட்டதாகவும் நக்கீரன் வட்டாரம் தெரிவித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications