"மஞ்சள் துண்டுடன் மகான் போல நடிக்கிறார் கருணாநிதி
சென்னை:
முதல்வர் கருணாநிதி மஞ்சள் துண்டுடன் மகான் போல நடித்துக் கொண்டிருக்கிறார்.அவருக்கு பகுத்தறிவு என்பது வெறும் முகமூடி என்று அதிமுக அவைத்தலைவர்காளிமுத்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து காளிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
பெரியார் விழாவை கொண்டாடி விட்டு ஆலயங்களுக்கு சென்று ஜெயலலிதாவழிபட்டது குறித்து கருணாநிதி அங்கலாய்த்துள்ளார்.
பெரியாருக்கு உற்ற சீடராக இல்லாமல் ஊரை ஏமாற்றும் கருணாநிதியைப் போலஎங்கள் ஜெயலலிதாவுக்கு வேஷம் போடத் தெரியாது.
பெரியார் கொள்கைகளைப் போற்றுவதும், பெருங்கோவில்களுக்குச் சென்றுவழிபடுவதும் எம்ஜிஆர் காலந்தொட்டே கட்சியில் நடைமுறையில் இருப்பதுதான்.
மஞ்சள் துண்டையும் போட்டுக் கொண்டு மகானாகவும் நடித்துக் கொண்டு ஊரைஏமாற்றும் கருணாநிதிக்குப் பகுத்தறிவு என்பது வெற்று முகமூடி.
மேடை கிடைத்து விட்டால் மேதாவியாக மாறுவதும், வேண்டியபத்திரிகையாளர்களை விட்டு விஷமத்தனமான கேள்விகள் எழுப்பி விடைஅளிப்பதும் கருணாநிதிக்கு கைவந்ததாயிற்றே.
மனசாட்சியை பதவி சுகத்துக்கு அடகு வைத்து விட்ட கருணாநிதி, அவரதுகுடும்பத்தினர் ஆங்காங்கு நடத்தும் யாகங்களும், வழிபாடுகளும் குறித்துஅறியாதவராக பித்தலாட்டம் செய்யலாமா?.
ஊருக்கு உபதேசத்தையும் வீட்டுக்குள் நாளுமொரு யாகத்தையும் வளர்த்துக்கொண்டிருப்பவர் கருணாநிதி. கோபாலபுரம் வீட்டுக்குள் கோவிலை வைத்துக்கொண்டு கருணாநிதி பெரியார் சீடர் என்று பேசலாமா? அனைத்து தெய்வங்களும்ஆலிவர் ரோட்டு வீட்டுக்குள் அலங்கரிக்கப்பட்டுள்ளதை அசல் நாத்திகர் கருணாநிதிஅறியாதவரா?
தனக்கு பிறகு தலைவர் என்று கருணாநிதியால் வளர்க்கப்படும் அவரது மகன்ஸ்டாலினின் வேளச்சேரி அரண்மனை பூஜை அறையில் கடவுள் படங்கள் இருப்பதைகுமுதம் பத்திரிகை படம் பிடித்துக் காட்டியதே.
இன்றைக்கு ஆகாத பிள்ளை என்று கருணாநிதி அசிங்கப்படுத்தும் அழகிரி வீட்டிலும்தெய்வ வழிபாடு நடைபெறுகிறதே.
வீட்டுக்குள் ஆஸ்திகனாகவும், வெளியில் நாஸ்திகனாகவும் வேஷம் போடும்கருணாநிதிக்கு பெரியாரின் தியாகம், பகுத்தறிவும் சுட்டுப் போட்டாலும் வராது.
ஆனால், ஜெயலலிதாவோ பெரியாரின் நெஞ்சுறுதிக்கு பிறப்பிடம். துணிவுக்குஇருப்பிடம். பெரியாரின் பெண்ணுரிமை கொள்கைக்கு உரமூட்டி வளர்ப்பவர்ஜெயலலிதா என்று காளிமுத்து அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications