லாரி மோதி 65 ஆடுகள், வாலிபர் பலி
Subscribe to Oneindia Tamil
வாடிப்பட்டி:
மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியில் ஆட்டு மந்தையில் லாரி மோதியதில் 65 ஆடுகள் சம்பவ இடத்திலேயே சின்னாபின்னமாகி இறந்தன. ஆடுகளைஓட்டி வந்த பூமிநாதனும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்தார்.
இறந்த ஆடுகளில் பெரும்பாலானவை சினை ஆடுகள். இந்த விபத்தில் இறந்த ஆடுகளின் வயிற்றுப்பகுதி சிதைந்து மிகவும் கோரமாகக் காட்சியளித்தது.
வாடிப்பட்டி அருகே தண்டனி-கிருஷ்ணாபுரம் சாலையில் இவ்விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது. இந்த விபத்தில் சிக்கிய லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications