"நாகப்பா தப்பியது ராஜ்குமாருக்குத் தெரியாது
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து நாகப்பா தப்பித்து வந்தது குறித்து என் தந்தைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார்தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சந்தனக்கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து 60 நாட்கள் கழித்து தப்பித்து வந்தார் நாகப்பா. பெங்களூர் வந்த அவர் முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார்.பின்னர் அவர் சதாசிவநகரிலுள்ள நடிகர் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்றார்.
அங்கு பர்வதம்மாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் பர்வதம்மாவிடம் நடிகர் ராஜ்குமார் உள்பட பிற இரண்டு பேரின் நலம் குறித்து தெரிவித்தார்.அப்போது ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் அனைவரும் சந்தித்துப் பேசினர். அதற்குப்பின் நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் அளித்த பேட்டியில், நாகப்பா தப்பிவந்திருக்கிறார். அவர் அப்பா, கோவிந்தராஜ், நாகேஷ் அனைவரும் நலமுடன் இருப்பதாகக் கூறினார்கள். அரசுத் தூதர் கோபாலிடமிருந்து இதுவரைதகவல்கள் எதுவும் வரவில்லை.
நாகப்பா தப்பி வந்ததால் என் தந்தைக்கும், பிறருக்கும் தொந்தரவு எதுவும் இருக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் வீரப்பன் என் அப்பாவைபெரியவர் என்று மிகவும் மரியாதையுடன் அழைக்கிறார்.
நாகப்பா அவராகவே தப்பி வந்து விட்டார். இவர் தப்பித்து வந்தது என் தந்தை உள்பட யாருக்குமே தெரியாது. நாகப்பாவுக்கு ஒரு குடும்பம் உள்ளது.அதனால் அவர் தப்பித்து வந்திருக்கலாம். இப்போதுதான் அவர் தப்பித்து வந்துள்ளார். அவரிடம் அவர் தப்பித்து வந்தாரா? வீரப்பன் விடுவித்தாரா என்றுதுருவி, துருவி கேட்க முடியாது. நிதானமாகத்தான் கேட்க முடியும் என்றார் சிவராஜ்குமார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications