நாகப்பாவைக் காணவில்லை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

காட்டிலிருந்து தப்பி வந்த நாகப்பா, தனது மனைவி மகளுடன் தலைமறைவாகிவிட்டார்.

வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா வியாழக்கிழமை காட்டிலிருந்து தப்பி சாம்ராஜ் நகர் வந்தார். வெள்ளிக்கிழமை அவர்பெங்களூருக்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.

பெங்களூரில் முதல்வர் கிருஷ்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் மல்லையா மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கிருந்து ராஜ்குமாரின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ராஜ்குமார் மனைவி பர்வதம்மா, மகன்களை சந்தித்துப்பேசினார்.

இரவு ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் வீட்டில் உறங்கினார்.

ஆனால், சனிக்கிழமை முதல் நாகப்பாவைக் காணவில்லை. அவரது மனைவி, மகளையும் கணவில்லை. அவர்கள்தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.

நாகப்பா தப்பி வந்ததாகக் கூறப்படுவதையடுத்து அவர் மீது ராஜ்குமார் வீட்டிலும் ராஜ்குமார் ரசகர்களும் கோபமாக உள்ளனர்.

இதனால் பயந்து போய் நாகப்பா தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் நாகப்பாவின் பாதுகாப்பை கருதி அரசும் போலீசும் சேர்ந்தே அவரை தலைமறைவாக வைத்துள்ளதாகவும்கூறப்படுகிறது. அவர் பெங்களூரில் ஒரு மருத்துவரின் கெஸட் ஹவுசில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக சில அதிகாரப்பூர்வமற்றதகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகப்பா விஷயத்தில் எல்லாமே ஒரே மர்மமாகவே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+