நாகர்கோவில் எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானார்
டெல்லி:
டெல்லியில் மத்திய அமைச்சரவை சனிக்கிழமை விரிவுபடுத்தப்பட்டது. தமிழக பா.ஜ.க. எம்.பி. பொன்.ராதாகிருஷ்ணன் இணை அமைச்சராகபதவியேற்றுக் கொண்டார்.
பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுச் செயலாளர் வெங்கய்ய நாயுடு, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். புதியஅமைச்சர்கள் ஜனாதிபதி மாளிகையில் சனிக்கிழமை மாலை பதவியேற்றுக் கொண்டனர்.
பொன்.ராதாகிருஷ்ணன், சிவசேனை எம்.பி.ஸ்ரீஹத்நாயக், திரினாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்ய பிரமோத்ஜா, தெலுங்கு தேச எம்.பி.யும், நடிகருமானகிருஷ்ணம் ராஜ் ஆகியோர் இணை அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மத்திய மின்துறை அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் சமீபத்தில் மரணமடைந்தார். மத்திய அமைச்சர்களாக இருந்த பங்காருலட்சுமண்,ராமஜெத்மலானி, உமாபாரதி ஆகியோர் ராஜினாமா செய்தனர். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் ஏற்பட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களின் இலாகாக்கள்:
கேபினட்:
வெங்கய்யா நாயுடு- கிராமப்புற வளர்ச்சித் துறை
சுஷ்மா சுவராஜ் - தகவல் தொடர்புத்துறை
இணை அமைச்சர்கள்:
கிருஷ்ணராஜ்-வெளியுறவுத்துறை
பொன்.ராதாகிருஷ்ணன்- இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை இணைஅமைச்சர்
சுரேஷ் பிரபு - மின்துறை
தனஞ்செயகுமார்--ஜவுளித்துறை இணைஅமைச்சர்
ஸ்ரீஹாட் யாசன் நாயக்- விவசாயத்துறை இணைஅமைச்சர்
சையத் ஹனாவாஸ் ஹூசேன்- மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்
சத்யமுகர்ஜி-ரசாயனத்துறை
சுந்தர்லால் பட்வா- ரசாயனம் மற்றும் உரத்துறை இணைஅமைச்சர்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications