நாகப்பா மீது ராஜ்குமார் குடும்பத்தினர் கோபம்
பெங்களூர்:
வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்ததால் நாகப்பா மீது நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தார் கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.
வீரப்பனால் கடத்தப்பட்டு 60 நாட்களுக்குப் பிறகு, கன்னடத் திரைப்பட உதவி டைரக்டர் நாகப்பா சத்தியமங்கலம் காட்டிலிருந்து தப்பித்து வந்து விட்டார்.
இந்நிலையில் அவர், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும், நடிகர் ராஜ்குமார் குடும்பத்தையும் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே நடிகர் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார் மற்றும் புனித் ஆகியோர் நாகப்பா மேல் கோபத்தில் உள்ளனர். அவர்கள் இதுகுறித்துக்கூறுகையில், எங்கள் தந்தை நடிகர் ராஜ்குமார், நாகப்பாவை சொந்த மகனைப் போலவே நடத்தினார். அவரை விட்டுவிட்டு நாகப்பா மட்டும் தப்பித்துவந்திருக்கக் கூடாது.
நான்காவது முறையாகக் காட்டுக்குச் சென்ற கோபால் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நாகப்பா தப்பித்து வந்தது பெரிய தவறு.இதனால் எங்கள் அப்பாவுக்கும் மற்ற 2 பேருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படலாமோ என்ற பயமும் இருக்கிறது என்றனர்.
முன்னதாக, நடிகர் ராஜ்குமார் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் நாகப்பா தப்பித்து வந்துள்ளதால், பர்வதம்மாவும் மிகவும் கவலையடைந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications