ராஜ்குமாரை வீரப்பன் விடுவிக்கக் கோருகிறார் ராமதாஸ்
மதுரை:
கன்னட நடிகர் ராஜ்குமாரையும், அவருடன் கடத்தப்பட்டவர்களையும் சந்தனக் கடத்தல்வீரப்பன் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்ராமதாஸ் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் வாழும்லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படாத விதத்தில் இந்தப்பிரச்சினையை தமிழக, கர்நாடக அரசுகள் அணுக வேண்டும்.
மத்தியில் நிதிச் சுமை அதிகரித்த காரணத்தால்தான் பெட்ரோலியப் பொருட்களின்விலை உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாது என்றாலும் கூடசமையல் காஸ் விலையை படிப்படியாக உயர்த்தியிருக்கலாம்.
சமையல் காஸ் விலையைக் குறைப்பதற்கான வாய்ப்பு குறித்து மத்திய அரசு யோசிக்கவேண்டும்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் சமீபத்தில் நடத்திய சிறை நிரப்பும் போராட்டம்நியாயமற்றது. திமுக கூட்டணியில் முன்பு இருந்து கொண்டு அந்தக் கூட்டணியின்சார்பில் வெற்றி பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இப்போது அதேஅரசை எதிர்த்துப் போராட்டம் நடத்து நியாயமில்லாதது.
போராட்டத்தில் கலந்து கொண்ட தமாகா எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உடனடியாகதங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.
பாண்டிச்சேரியில் என் மீது நடந்த தாக்குதல் விடுதலைச் சிறுத்தை அமைப்பினர்திட்டமிட்டு நடத்தியதேயாகும். இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர்சிந்தனைச்செல்வன் என்ற விடுதலைத் சிறுத்தை அமைப்பின் உறுப்பினர் ஆவார். இதுஎல்லாம் பாண்டிச்சேரி முதல்வர் சண்முகத்திற்குத் தெரியும்.
என் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி ஆகியோரைச் சந்தித்துப் புகார் கூறுவேன் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications