தோல்வியுடன் திரும்பினார் கோபால்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக நான்காவது முறையாக காட்டுக்குச்சென்றிருந்த அரசுத் தூதர், நக்கீரன் கோபால் சனிக்கிழமை காலை சென்னைதிரும்பினார்.
இம்முறையும் நடிகர் ராஜ்குமார் இல்லாமல் தோல்வியுடனேயே திரும்பியுள்ளார்கோபால். 51 தடா கைதிகள் மற்றும் 5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுவிப்பதில் உள்ளசட்ட சிக்கல்களை வீரப்பனுக்கு விளக்கி, பினையாளிகளை மீட்டு வரும் நோக்கத்தில்கோபால் காட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில் பினையாளிகளில் ஒருவரான நாகப்பா, வியாழக்கிழமை இரவுகாட்டுக்குள் இருந்து வந்தார். அவர் தப்பி வந்ததாகக் கூறப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் கோபாலும் சனிக்கிழமை சென்னை வந்து சேர்ந்தார். வந்தவுடன்முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசினார். வீரப்பனுடன் நடத்தியபேச்சுவார்த்தை குறித்து முதல்வருக்கு அப்போது விளக்கினார்.












Click it and Unblock the Notifications