திமுக மதமற்ற கட்சி என்கிறார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

திமுக மதசார்புள்ள கட்சியோ அல்லது மதச்சார்பற்ற கட்சியோ அல்ல. அது மதமற்றகட்சி என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் "கலைஞர் அரங்கம்கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், திமுகவுக்கு அடையாளம் தெயாத எதிர்ப்புகள்இருக்கின்றன. அதை சமாளிக்க வேண்டும். திமுக, பெரியார் அண்ணா வழியில்நடைபோட்டுக் கொண்டுள்ளது. ஆனால், பொதுமக்களை, சிறுபான்மை மக்களைகுழப்ப மதச்சார்பு பாஜகவுடன் சேர்ந்து விட்டார்கள் என்று குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் இரண்டு அணிகள் இருப்பதாகவும் அதில் திமுக தலைமையிலான அணிபாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பதால் மதவாத அணி என்றும் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், நான் மதச்சார்பற்ற அணியை சார்ந்தவன்.

மதச்சார்பற்ற அணி என்று கூறிக் கொள்கிறவர்கள் கடந்த ஏழெட்டு மாதங்களுக்குமுன் சேலத்தில் சமுதாய நல்லிணக்க மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்டநிகழ்ச்சிக்கான விளம்பரங்களில் சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தியிருந்தனர்.

குறிப்பாக 786 என்ற எண் அல்லாவின் போன் நம்பரா? பரிசுத்த ஆவி இட்லியைஅவிக்குமா? இந்து என்றால் திருடர்கள் என்று எல்லா மதத்தினரையும்இழிவுபடுத்தியிருந்தனர்.

மூப்பனார் போன்றவர்கள் இன்று திமுக மீது பகையை கக்கலாம். ஆனால், அது தவறுஎன்று உணரும் காலம் விரைவில் வரும். ஏதோ ஒரு திட்டத்தில் அதிமுகவைமூப்பனார் ஆதரிக்கிறார். அதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்றார் முதல்வர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+