அமைச்சர் பதவி தரலியே ... வருந்துகிறார் திருநாவுக்கரசு
சென்னை:
மத்திய பாஜக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எனக்கு அமைச்சர் பதவி தராததுவருத்தமளிக்கிறது என்று எம்ஜிஆர் அதிமுக தலைவரும், புதுக்கோட்டைநாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு தெரிவித்தார்.
சென்னையில் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சரவையை பிரதமர் வாஜ்பாய் விரிவுபடுத்தியுள்ளார். இதில் எங்கள்கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தொண்டர்கள் எல்லோரும்எதிர்பார்த்தனர். ஆனால், எங்களை புறக்கணித்து விட்டனர்.
பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவம்தரப்படாத கட்சியாக நாங்கள் இருக்கிறோம். மத்திய அமைச்சரவையில் எம்ஜிஆர்அதிமுக தவிர எல்லா கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. "பிளாக்மெயில்செய்தவர்களுக்கு எல்லாம் மந்திரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜியின் மிரட்டலைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த ஜார்ஜ்பெர்னாண்டசை பிரதமர் அனுப்பி உள்ளார். மேற்கு வங்காளத்தில் 2 பாஜக எம்.பிக்கள்உள்ளனர். அந்த இரண்டு பேருமே மந்திரிகள். ஆனால், எங்களுக்கு இல்லை. இதுஎன்ன நியாயம்?
நாங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை.
அமைச்சர் பதவி தராததால் எங்கள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகஅணியில் ஏன் தொடர வேண்டும் என்று கேட்கின்றனர்.
எனக்கு அமைச்சர் பதவி தராதது வருத்தமளிக்கிறது. எனக்கு நானே எப்படி பதவிகேட்பது என்று தான் அமைதி காத்தேன். ஆட்சிக்கு வருவதற்கு முன்புதனிப்பெரும்பாமை கிடைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமைப்போம் என்ற பாஜகஇப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய பதவிகளை ஒதுக்க மறுக்கிறது. எங்களுக்குஇதில் வருத்தம் இருந்தாலும் இந்த அணியை விட்டு வெளியேற மாட்டோம்.
ஜனவரி 20ம் தேதி மதுரையில் எம்ஜிஆர் அதிமுக மாநில மாநாடு நடத்துகிறோம்.பிரதமரை அழைத்துள்ளோம். எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் முன்னாள்அதிமுகவினர் "புரட்சித்தலைவர் அதிமுக என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளனர்.அதற்கும் எங்கள் கட்சிக்கும் பெயரில் பெரிய வித்தியாசம் இல்லை. இதை எதிர்த்துநீதிமன்றம் செல்லும்படி எங்கள் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால், நான் அதைஏற்கவில்லை என்றார் திருநாவுக்கரசு.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications