வக்கீல் வேணுகோபாலை அனுப்புங்க..
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் நக்கீரன் கோபால் தோல்வியடைந்து விட்டார். எனவேமைசூர் தடா கைதிகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் வேணுகோபாலை அரசுத் தூதராக அனுப்பவேண்டும் என்று கர்நாடக எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
செவ்வாய்க்கிழமை முதல்வர் கிருஷ்ணா கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு, சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரும், மதச்சார்பற்ற ஜனதாதளதலைவருமான கே.எச்.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ராஜ்குமாரை மீட்கும் முயற்சியில் கோபால்தோல்வியடைந்து விட்டார்.
வேணுகோபலை தூதாரக அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன வீரப்பனுக்காகபல வழக்குகளில் வேணுகோபால் ஆஜராகியுள்ளார். எனவே அடுத்த முறை கோபால், வீரப்பனைச்சந்திக்கச் செல்லும்போது கூடவே வேணுகோபாலையும் அனுப்ப வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் அரசு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றுவிரும்புகிறோம். அக்டோபர் 11-ம் தேதி தடா கைதிகள் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்தீர்ப்பு வழங்கவுள்ளது. அதுவரை பொறுமையாக இருத்தல் நல்லது என்றார் அவர்.
நான் செல்கிறேன் ... வீரப்பனின் கூட்டாளி மகன் கூறுகிறார்:
இதற்கிடையே, ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனிடம் தூது செல்ல தயாராகஇருப்பதாக வீரப்பனின் கூட்டாளி மாதையனின், மகன் மணி கூறியுள்ளார்.
ஏற்கனவே வீரப்பனிடம் சென்று அவரிடம் பிடிபட்டு, பின் மீண்டு வந்த வழக்கறிஞர் கிருஷ்ணசாமிஇதுகுறித்து சென்னையில் கூறுகையில், எனது ஜூனியர் மணி, வீரப்பனின் கூட்டாளி மாதையனின் மகன்ஆவார். அவர் காட்டுக்குச் சென்று ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக வீரப்பனிடம் பேசமுன்வந்துள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். கிருஷ்ணா அனுமதிகொடுத்தால் உடனடியாக மணி காட்டுக்குச் செல்வார். அவருடன் மேலும் சிலரும் செல்வர் என்றார்அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications