இப்போதைக்கு ஓய்வுபெற மாட்டேன் - மல்லேஸ்வரி
டெல்லி:
தனது ஓய்வுபெறும் திட்டத்தை மாற்றிக் கொண்டதாகவும், இப்போதைக்குஓய்வுபெறமாட்டேன் என்றும் இந்திய பளுதூக்கும் வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரிகூறினார்.
சிட்னியில் சமீபத்தில் முடிவடைந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒருவெண்கலப் பதக்கம்தான் கிடைத்தது. அந்த பதக்கத்தை பளுதூக்குதலில் பெற்றுத் தந்துசாதனை படைத்தவர் கர்னம் மல்லேஸ்வரி.
அவர் சிட்னி ஒலிம்பிக் முடிந்தவுடன் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிட்னியிலிருந்து திரும்பியவுடன் தனியார் தொலைக்காட்சிக்கு அவர்அளித்த பேட்டி:
எனது ஓய்வு பெறும் திட்டத்தை நான் மாற்றிக் கொண்டேன். இப்போதைக்கு ஓய்வுபெற மாட்டேன். ஓய்வு பெறுவதாக நான் அறிவித்தபோது பலர் என்னிடம் வேண்டாம்என்று கூறினார்கள்.
குறிப்பாக நான் ஓய்வு பெற்றால், இந்தியக் குழுவிலிருந்து விலகிவிடுவேன் என்றுஅணியின் தலைமைப் பயிற்சியாளர் சாந்து தெரிவித்தார்.
பலருடைய வற்புறுத்தல் மற்றும் நிர்பந்தத்தின்பேரில் நான் தொடர்ந்து போட்டிகளில்கலந்து கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது ஓய்வு பெறும் திட்டத்தை மாற்றிக்கொண்டேன்.
சிட்னியில் நான் பதக்கம் வென்றபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எனது வெற்றிக்கு கடவுளின்அனுக்கிரமும், என் மீது மக்கள் வைத்த நம்பிக்கையும்தான் காரணம்.
சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே ஒரு பதக்கத்தையும் நான்பெற்றுத்தந்தது என்பதை நினைத்து நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்என்றார் மல்லேஸ்வரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications