மம்தாவுக்கு பணிகிறது மத்திய அரசு: மண்ணெண்ணெய்,காஸ் விலையை குறைக்க முன் வந்தார் வாஜ்பாய்
டெல்லி:
பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்த ரயில்வேஅமைச்சர் மம்தா பானர்ஜியை சரி கட்டுவதற்காக மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலையைக் குறைக்கமத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மம்தா பானர்ஜியுடன் பேச சிறப்புத் தூதரையும் பிரதமர் கல்கத்தாவுக்கு அனுப்பியுள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜியிடம் 9 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் மத்தியஅமைச்சர்களாக இருந்த மம்தாவும், அஜித் பாஞ்சாவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர்.
இந்த விலை உயர்வை 3 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும் என மம்தா நிபந்தனை விதித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைக்க வேண்டும் எனவும் மம்தா கோரி வருகிறார். (அவர்ராஜினாமா செய்ததற்கு முக்கிய காரணமே ஜோதிபாசு அரசை மத்திய அரசு கலைக்காமல் இருப்பது தான்).இப்போது மம்தாவுடன் மேற்கு வங்க பாரதீய ஜனதாவும் கூட்டு சேர்ந்து கொண்டு ஜோதிபாசு அரசைக் கலைக்கச்சொல்லி வருகின்றன. இதன்மூலம் தான் மம்தா-காங்கிரஸ் கூட்டணி உருவாகாமல் தடுக்க முடியும் எனவும் மாநிலபாரதீய ஜனதா தலைவர்கள் கூறுகின்றனர்.
திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களை கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அடிக்கடி தாக்கி வருவதாவும் மம்தாகூறுகிறார்.
மம்தாவை திருப்திப்படுத்துவதற்காக கம்யூனிஸ்ட் ஆட்சியை மத்திய அமைச்சர் அத்வானி விமர்சித்து வருகிறார்.அவருக்கு முதல்வர் ஜோதிபாசு கடும் பாஷையில் பதில் சொல்லி வருகிறார்.
மண்ணெண்ணெய் விலையைக் குறைத்தாலும் கூட மம்தா தனது ராஜினாமாவைத் திரும்பப் பெற மாட்டார் என்றேதெரிகிறது. அவர் வெளியில் இருந்தவாரே வாஜ்பாய் அரசுக்கு ஆதரவைத் தொடர்வார்.
மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள பாரதீய ஜனதாவுக்கு ஒவ்வொரு எம்.பியுமே மிக மிக முக்கியம்.இதில் யாரையும் இழக்க அரசு தயாராக இல்லை. மம்தாவிடம் 9 எம்.பிக்கள் உள்ள நிலையில் வாஜ்பாய் அரசுஅவரிடம் பணிந்து தான் போயாக வேண்டிய நிலையில் உள்ளது.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பிக்கள் வேண்டும். இப்போது பாரதீய ஜனதாவுக்கு 306 எம்.பிக்களின் ஆதரவுஉள்ளது. இதில் தெலுங்கு தேசம் கட்சி வெளியில் இருந்து தான் ஆதரவு அளித்து வருகிறது. இவர்களுடன்மம்தாவும் வெளியே இருந்து ஆதரவு தர ஆரம்பித்தால், கூட்டணி தடுமாறிக் கொண்டே தான் செயல்பட முடியும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications