தலிபான்களைக் கவனிக்க கூட்டுக் குழு .. இந்தியா, ரஷியா முடிவு
டெல்லி:
ஆப்கானிஸ்தான் விவகாரத்தைக் கவனிப்பதற்காக கூட்டுக் குழுவை அமைக்கஇந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்துள்ளன.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை பரப்புவதில் ஆப்கானிஸ்தானைக் கையில்வைத்துள்ள தலிபான் அமைப்பினர்தான் காரணம் என இந்தியாவும், ரஷியாவும்நினைக்கின்றன.
இந்தியாவின் காஷ்மீர் மற்றும் ரஷியாவின் செச்னியாவில் உள்ள தீவிரவாதிகளுக்குதலிபான் ஆதரவு இருப்பதாகவும் இரு நாடுகளும் கருதுகின்றன. இதனால்ஆப்கானிஸ்தான் விவகாரத்தை சேர்ந்து கவனிக்க இரு நாடுகளும் முடிவுசெய்துள்ளன.
செவ்வாய்க்கிழமை பிரமதர் வாஜ்பாய் மற்றும் இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் புடின்ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த முடிவுஎட்டப்பட்டது.
இருப்பினும் கூட்டுக் குழு அமைப்பது தொடர்பாக இதுவரை ஒப்பந்தம் எதுவும்ஏற்படவில்லை.
டாங்குகள் வாங்கும் ஒப்பந்தம் இறுதியாகிறது:
இதற்கிடையே, ரஷியாவின் டி-90 ரக டாங்குகள் மற்றும் சுகோய்-30 ரக போர்விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்றுதெரிகிறது.
இதுதொடர்பாக நீண்ட கால ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. பல கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் மூலம் ரஷியாவின் அதிநவீன போர்விமானம் மற்றும் டாங்குகள் இந்தியாவுக்குக் கிடைக்கும்.
டி-90 ரக டாங்குகள் மூலம் நவீன ரக ஏவுகணைகளை ஏவ முடியும். அதே போல,உலகிலேயே அதி நவீன போர் விமானமாக சுகோய் விளங்குகிறது.
செவ்வாய்க்கிழமை இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தம் தொடர்பான ஷரத்துக்களைஇறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒப்பந்தம் கையெழுத்தாக சில நாட்கள்ஆனாலும் கூட கொள்கை அளவில் முதலில் ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ரஷியாவிடமிருந்து 300 டி-90 ரக டாங்குகளையும், 140 சுகோய் போர் விமானங்களைஇந்தியாவில் தயாரிப்பதற்கான அனுமதியையும் இந்தியா வாங்கவுள்ளது.
சுகோய் தயாரிப்பிற்கான செலவு 2 பில்லியன் டாலர்களைத் தொடும் என்றுதெரிகிறது.டாங்குகளுக்கான செலவு குறித்துத் தெரியவில்லை.
ஏற்னவே இந்திய விமானப் படைக்குத் தேவையான 50 சுகோய் போர் விமானங்களைவாங்க ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ரூ. 78 பில்லியன்தொகைக்கான ஒப்பந்தம் இது இருப்பினும் இதுவரை 18 விமானங்கள் மட்டுமேஇந்தியா வந்துள்ளன.
டி-90 ரக டாங்குகளைப் பொறுத்தவரை, ரஷியாவிடமிருந்து இந்தியா 100டாங்குகளைப் பெறும். மீதமுள்ள 200 டாங்குகளை தமிழகத்தின் ஆவடி நகரிலுள்ளடாங்குகள் தொழிற்சாலையில் தயாரித்துக் கொள்வதற்கான அனுமதியைரஷியாவிடமிருந்து பெறும்.
இதேபோல, அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் விமானம் தாங்கிக் கப்பலை வாங்குவதுதொடர்பாகவும் ரஷியாவிடம் இந்தியா பேசி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாகஇந்த விவகாரம் நிலுவையில் இருந்து வருகிறது. இதை இந்தியாவுக்கு இலவசமாகவழங்க ரஷியா முன்வந்துள்ள. இருப்பினும் இதை மராமத்து செய்ய இந்தியாவுக்கு700 மில்லியன் டாலர் தேவைப்படும்.
கோர்ஷ்கோவ் கப்பலில் இருந்து செயல்பட ரஷியாவின் மிக்-29கே ரக போர்விமானங்கள் தகுதியானவை என்று இந்தியா அடையாளம் கண்டுள்ளது. எனவே 40போர் விமானங்களை வாங்குவது குறித்தும் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications