ஒரிஸா கவர்னரின் உறவுப் பெண்ணுக்கு சென்னையில் அடி
சென்னை:
ஒரிஸா கவர்னரின் உறவுக்காரப் பெண்ணுக்கு சென்னை ஜவுளிக் கடையில் அடி உதை விழுந்தது. குடையை திருடியதாக அப்பெண்மணி, கடை ஊழியர்களால்தாக்கப்பட்டார்.
ஒரிஸா மாநில கவர்னாக இருப்பவர் எம்.எம்.ராஜேந்திரன். இவரது உறவுக்காரப் பெண் விசாலாட்சி (45). சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஸ்பள்ளியில் 15 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிகிறார்.
இவர் தனது சகோதரர் நந்தகுமார் மற்றும் குழந்தைகளுடன் திநகரில் உள்ள ஜெயச்சந்திரா டெக்ஸ்டைல் என்ற பிரபல ஜவுளிக் கடையில் துணி வாங்கச்சென்றனர்.
மூன்றாவது மாடியில் குழந்தைகளுக்காக சகோதரர் நந்தகுமார் துணிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அடுத்த தளத்தில் புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு,குடை ஒன்றையும் வாங்கிக் கொண்டு பில் போடுவதற்காக கீழ் தளத்திற்கு வந்தார் விசாலாட்சி.
கூட்டம் அதிகமாக இருக்கவே, குழந்தைகளுக்காக காத்திருந்தார். அப்போது கடை ஊழியர்கள் கையில் இருந்த குடையை எப்படி எடுத்து வந்தீர்கள்என்று சந்தேகத்தோடு கேட்டனர். இவர் பில் போடுவதற்காக கொண்டு வந்துள்ளேன் என்று கூறிய பதிலை உதாசீனப்படுத்தி விட்டு, விசாலாட்சியைதலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றனர்.
கல்லாவில் இருந்த ஊழியர்கள் அவரை அடித்தனர். பின்னர் போலீசுக்கு போனில் திருட்டுப் புகாரும் கொடுத்து விட்டனர். விரைந்து வந்த போலீசாரிடம்எவ்வளவோ விளக்கம் சொல்லியும் அவர்கள் கேட்கத் தயாராக இல்லை.
கடை அதிபரின் மாமூலான செல்வாக்கிற்கு பயந்து விசாலாட்சியின் வாக்குமூலத்தை ஏற்க மறுத்து விட்டனர்.
கவர்னரின் உறவினர்; பள்ளி ஆசிரியை என்றெல்லாம் எடுத்துக் கூறியும் ஏற்காத தி.நகர் போலீசார் மீது அரசியல்வாதிகள் செல்வாக்குடன் சென்னைபோலீஸ் கமிஷனர் காளிமுத்துவிடம் புகார் செய்துள்ளார் விசாலாட்சி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications