இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு குறைகிறது
வாஷிங்டன்:
இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு குறைந்து வருகிறது என்று 2000-ம்ஆண்டின் உலக முதலீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைப்புவெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டின்அளவு 1999-ம் ஆண்டில் 2.2. பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
1998-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீட்டின் அளவு 2.6 பில்லியன்டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 ஆண்டுகளில் 1999-ம் ஆண்டில்தான்இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு அளவு மிகவும் குறைந்துள்ளது.
1997-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகபட்சமாக 3.5பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கு அடுத்தஆண்டுகளில் முதலீட்டுத் தொகை குறைந்துவிட்டது.
இந்தியாவுடன் ஒப்புப்படுத்திப் பார்க்கும்போது சில ஆசிய நாடுகளில் நேரடிவெளிநாட்டு முதலீடு அதிகமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின்வர்த்தகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான அமைப்பின் தலைமைப் பொருளாதாரநிபுணர் கார்ல் பி சாவந்த் கூறியுள்ளார்.
1999-ம் ஆண்டில் சீனாவில் 40 பில்லியன் டாலர்கள், சிங்கப்பூரில் 6.9 பில்லியன்டாலர்கள், ஹாங்காங்கில் 23 பில்லியன் டாலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிக அளவில் கவரும் வகையிலேயே இந்தியமார்க்கெட் உள்ளது. ஆனால், மத்தியில் உள்ள வாஜ்பாய் தலைமையிலான பாஜகஅரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதில் வேகம் காட்டத்தவறிவிட்டது.
இதனால், பொருளாதாரக் கொள்கைகள் மீது ஏற்பட்ட சந்தேகம் உள்ளிட்டபிரச்சினைகளால் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாடுகள் தயக்கம் காட்டுகின்றனஎன்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications