Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மதியுங்கள் .. பாக்.கிற்கு புடின் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சர்வதேச எல்லைக் கோட்டை மதித்து நடக்கவேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் புதன்கிழமை நடைபெற்றநாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் ரஷ்ய அதிபரானபுடின், ரஷ்ய மொழியில் சுமார் 15 நிமிடம் பேசினார்.

ரஷ்ய மொழியில் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே உடனுக்குடன் அவரது பேச்சுஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அவரது பேச்சு விவரம்:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக உள்ள பெரியதும்முக்கியமானதுமான காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இரு தரப்பு பேச்சுவார்த்தைதான்.வெளிநாடுகளின் தலையீடு இப் பிரச்சினைக்குத் தீர்வாகாது.

சர்வதேச எல்லைக் கோட்டை (லைன் ஆப் கன்ட்ரோல்) ஒவ்வொரு நாடும் எந்தவிதநிபந்தனையும் இன்றி மதித்து நடக்கவேண்டும். அத்தகைய நடைமுறை கடைப்பிடிக்கும்பட்சத்தில் அண்டை நாடுகளுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

இரு நாடுகளுக்கும் இடையே எல்லை கடந்த தீவிரவாத நடவடிக்கைகள் வன்மையாகக்கண்டிக்கத்தக்கது. அந்த வகையில் இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யாதனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்படரஷ்யா எப்போதும் தயாராக உள்ளது. நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டும்என்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் ஒரே கருத்தையே கொண்டுள்ளன.

பாகிஸ்தானுடன் ரஷ்யா கொண்டுள்ள உறவு, இந்தியாவுடனான உறவுக்கு எந்தபாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார் புடின்.

புடினுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பேசினார்.

இந்தியா அனைத்து நாடுகளுடனும் நட்புறவு கொள்ளவே விரும்புகிறது. குறிப்பாகஅண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது.

ஆசியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் அமைதியும், நிலைத்தன்மையும் நீடிக்கஇந்தியா-ரஷ்யா இடையேயான உறவு நீடித்திருப்பது மிகவும் அவசியம்.

புடினின் இப் பயணத்தால் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு மேலும்வலுப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

உலகளாவிய அளவில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும். ஒருநாட்டின் கொள்கைத்திட்டத்தில் பயங்கரவாதம் என்பதே இருக்கக்கூடாது. இது அந் நாட்டுக்கும் மட்டுமல்லஎல்லா நாடுகளுக்கும் தீங்கானது என்றார் வாஜ்பாய்

துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களைத் தலைவருமான கிருஷ்ண காந்த் பேசினார்.

காஷ்மீர் பிரச்சினை, சர்வதேச எல்லைக்கோடு பிரச்சினை ஆகியவற்றைப் பற்றி ரஷ்யஅதிபர் புடின் குறிப்பிட்டுப் பேசியது, கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தஅமெரிக்க அதிபர் பில் கிளின்டன் தெரிவித்த கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகவேஇருந்தது.

பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை, சர்வதேச எல்லைக்கோடு, நட்புறவு பற்றி அவர்தெரிவித்த கருத்துக்களுக்கு நாடாளுமன்ற அவையில் குழுமியிருந்த அனைவரும்கரகோஷம் எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

புடினின் பேச்சைக் கேட்ட முழுமையான அளவில் உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக்குவந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், முன்னாள்குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகஅவைக்கு வந்திருந்தனர்.

அவைக்குப் புடின் வந்தபோது அவருக்கு அஸ்ஸாமைச் சேர்ந்த ஒரு பெண் உறுப்பினர்சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தென் மாநிலங்களைச்சேர்ந்த மேலும் இரு உறுப்பினர்களும் அவருக்குச் சால்வை அணிவித்தனர்.

பேச்சை முடித்துவிட்டு தனது இருக்கைக்குத் திரும்பும்போது முன் வரிசையில்உட்கார்ந்திருந்த முக்கிய அழைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் புடின்கைகுலுக்கினார்.

ரஷ்யா-இந்தியா இடையே ராணுவ ஒப்பந்தம்:

இந்தியா-ரஷ்யா இடையே பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ ஒப்பந்தம் புதன்கிழமைகையெழுத்தானது.

இந்த ஒப்பந்த்தின் மூலம் டி-90 ரக டாங்குகள் 310-ஐ இந்தியாவுக்கு ரஷ்யா சப்ளைசெய்யும். அது தவிர ராணுவ தொழில்நுட்ப ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டு அரசு சார்ந்தகமிஷனும் அமைக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸும் ரஷ்யதுணைப் பிரதமர் இல்யா கிளெபனோவும் கையெழுத்திட்டனர்.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்:

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இகோர் இவானோவ் இந்த ஆண்டு இறுதியில்பாகிஸ்தான் செல்லவிருப்பதாகத் தெரிகிறது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார் என்று அதிகாரிகள் கூறியதாக பத்திரிக்கைகள் செய்திவெளியிட்டுள்ளன.

ஐ.நா. சபையின் மில்லேனியம் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள நியுயார்க்சென்றிருந்தபோது ரஷ்ய அமைச்சரைப் பார்த்து தனது நாட்டுக்கு சுற்றுப்பயணம்வரவேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் அழைப்புவிடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் இகோர் இவானோவ்பாகிஸ்தான் செல்கிறார் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக பாகிஸ்தானுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் இரு நாட்டுகளின் முக்கிய தலைவர்கள் பயணங்களைமேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய அதிபரின் சிறப்புத் தூதர் செர்ஜி யாஸ்டிராஸெம்ஸ்கி கடந்த மாதம் பாகிஸ்தானுக்குச்சென்று அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பிரிவுத் தலைவர் மாஸ்கோ சென்றுஅதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+