தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க கூடுகிறது ஆர்.எஸ்.எஸ்.
டெல்லி:
தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் மூன்றுநாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் செயல்பாட்டை சமீபத்தில் குறை கூறிய ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இப்போது தேசியப் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டத் துவங்கியுள்ளது.
அக்டோபர் 13-ம் தேதி ஆக்ராவில் மூன்று நாட்களுக்கு இந்தக் கூட்டம் நடக்கிறது.ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் 75-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த கூட்டத்திற்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்பட பல கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாநாடு குறித்து பா.ஜ.க. தலைவர் பகவான் சங்கர் ராவத் கூறுகையில், இந்தமாநாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. உள்நாட்டுமற்றும் வெளிப் பாதுகாப்பு குறித்து யாரும் இப்போது அதிகம் கவலைப்படுவதாகத்தெரியவில்லை.
மாநாட்டில் கலந்து கொள்ள சோனியா காந்தி தவிர, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், சி.பி.எம். கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒரே கருத்தைக்கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளது. கொள்கையில் வேறுபாடுகள்இருந்தாலும் கூட, தேசியப் பாதுகாப்பு என்று வரும் போது அதில் அனைவருக்கும்ஒரே கருத்துதான் இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமரின் அறிவியல் ஆலோசகர் அப்துல் கலாம், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும்இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார் ராவத்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications