விசா: இனி 6 ஆண்டுகளுக்குப் பெறலாம்
வாஷிங்டன்:
6 லட்சம் சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு எச்1பி விசா வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் சபையில்நிறைவேற்றப்பட்டது.
தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் 6 ஆண்டுகளுக்கான விசாவைப் பெற முடியும். ஆண்டுக்கு 1,95,000பேருக்கு இந்த விசா வழங்கப்படும். இது மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
மீதம் பேருக்கு வழக்கம்போல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே விசா வழங்கப்படும்.
தற்போது ஆண்டுக்கு 1,15,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. புதிய சட்டத்தின் மூலம் இந்தியா மற்றும் சீனாவுக்கு பெரும்பயன் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே எச்1பி விசா மூலம் அமெரிக்கா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தற்காலிக விசா வழங்கப்படும். அதன் பிறகுமேலும் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் விசா பெற வேண்டும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த சட்டத் திருத்தம் அமலில் இருக்கும். சட்டத் திருத்தத்தை ஆதரித்து 96 பேரும் எதிர்த்து ஒருவரும் ஓட்டுப் போட்டனர்.இந்த சட்டத் திருத்தத்திற்கு துவக்கத்தில் பெரும் எதிர்ப்பு இருந்தது.
சட்டத் திருத்தத்தில் பல முக்கிய அம்சங்களை அதிபர் கிளிண்டன் நிர்வாகம் சேர்த்திருந்தது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது, லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு தற்காலிக குடியுரிமை தராமல், நிரந்த குடியுரிமை தருவதுஉள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.
இருப்பினும் குடியரசுக் கட்சி எம்.பிக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இந்த அம்சங்கள் நீக்கப்பட்டன. இறுதியில் சட்ட மசோதாநிறைவேறியது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications