அப்பா கருணாநிதி-மகன் அழகிரி சமரசம்
சென்னை:
அப்பா கருணாநிதியும் மகன் அழகிரியும் சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து அடுத்து திமுகவில் உட்கட்சி சண்டை ஓய்ந்தது. அழகிரி ஆதரவாளர்கள் மீது கட்சித் தலைமை மேற்கொண்டநடவடிக்கையும் இரவோடு இரவாக கைவிடப்பட்டது. இந்த திடீர் சமரசத்தால் திமுக வட்டாரத்தில் மகிழ்ச்சி திரும்பியுள்ளது.
திமுக தலைமையின் அடுத்த வாரிசு யார் என்பதில் அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு,கருணாநிதி - அழகிரி மோதலாக மாறியது. நீறுபூத்த நெருப்பாக இருந்த இப்பிரச்னை திமுக முப்பெரும் விழாவில் பகிரங்கமாகவெடித்தது.
தலைமைக்கு எதிராக நேரடித் தாக்குதல் நடத்திய அழகிரி, முப்பெரும் விழாவை ஆதரவாளர்களோடு சேர்ந்து புறக்கணித்தார்.இதன் காரணமாக கடும் கோபமடைந்த கருணாநிதி, அழகிரியோடு கட்சியினர் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிக்கைவெளியிடச் செய்தார்.
அந்த அறிக்கையால் கோபமடைந்த அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் 10 பஸ்களை எரிந்தன. மதுரை பக்கம் அரசு பஸ்கள்செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பதட்டம், வன்முறை என்று அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் தாண்டவமாடினர்.
பத்திரிகைகளும், எதிர்க்கட்சிகளும் அரசுக்கு எதிராக திரும்ப, பயந்துபோன திமுக தலைமை பெற்ற மகனிடமே சமரசம் பேசதூது அனுப்பியது.
குடும்ப உறவை காட்டி தாயார் தயாளு அம்மாளும், கட்சிப் பாசத்தை நினைவுபடுத்தி அமைச்சர்களும் இந்த காரியத்தில்இறங்கினர்.
அதில் இப்போது வெற்றி கிடைத்துள்ளது. அழகிரியின் கோபம் தணிந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே என்னென்னவிவாதங்கள் நடைபெற்றனவோ தெரியவில்லை; இப்போது திமுக தலைமை பணிந்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னை வந்துள்ள மு.க.அழகிரி, தந்தை கருணாநிதியை சந்தித்துப் பேசினார். நீண்ட நாட்களாகஅப்பாவுக்கும் பிள்ளைக்கும் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் இருந்த நிலை அதோடு முடிந்தது.
இதற்கு பிறகு அழகிரியின் ஆதரவாளர்கள் மீது கட்சி எடுத்த நடவடிக்கை கைவிடப்படுவதாக இரவோடு இரவாக அன்பழகன்மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது.
முப்பெரும் விழாவை புறக்கணித்த குற்றத்திற்காக அழகிரியின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தளபதி, வேலுச்சாமி மற்றும் மாவட்டச்செயலாளர் மூர்த்தி ஆகியோர் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்க தலைமை உத்தரவிட்டிருந்தது. இது இப்போது வாபஸ்பெறப்பட்டுள்ளது.
அது சரி...மதுரையில் எரிந்து போன 10 பஸ்கள், இந்தக் கலவரத்தில் மக்கள் இழந்த நிம்மதிக்கு யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்....?












Click it and Unblock the Notifications