"கெல்லாக்ஸ் நிறுவனத் துணைத் தலைவராக தென்னிந்தியர் நியமனம்
நியுயார்க்:
உலகில் பிரபலமான பருப்பு வகைத் தயாரிப்பு நிறுவனமான கெல்லாக்ஸ் நிறுவனத்துணைத் தலைவராக அமெரிக்க இந்தியர் ராஜன் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் தலைமைத் தகவல் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ள ராஜன்நாகராஜன், அக்டோபர் 12-ம் தேதி பொறுப்பேற்றுக் கொள்ள இருப்பதாக அந்நிறுவனத்தின் செயல் துணைத் தலைவரும் தலைமை நிதிப்பிரிவு அதிகாரியுமானதாமஸ் வெப் தெரிவித்தார்.
கெல்லாக்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு நிறுவனத்தில் உள்ள பிரிவுகளின் தலைவர்களின்செயல்பாடு சிறப்பாக இருப்பதே காரணமாகும். அந்த வகையில் புதிய தலைமைப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ராஜன் நாகராஜனுக்கு தொழில்நுட்ப அறிவும்,மக்களிடையேயும், நிறுவனங்களுக்கு இடையேயும் அவர் தொடர்பு கொள்ளும் முறைகெல்லாக்ஸ் நிறுவனத்துக்கு மேலும் வெற்றியைத் தரும் என்று நம்புவதாக அவ்தெரிவிதார்.
தற்போது ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்புப்பிரிவுத் தலைவராக ராஜன் நாகராஜன் பணியாற்றி வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது. பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர்படிப்படியாக முன்னேறி உலகின் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
உலகிலேயே பருப்பு உற்பத்தி மற்றும் ஆயத்த உணவு தயாரிப்பில் முன்னணியில்உள்ளது கெல்லாக்ஸ் நிறுவனம். இதற்கு 160 நாடுகளில் விற்பனைப் பிரிவுகள்உள்ளன. 20 நாடுகளில் தயாரிப்புக் கூடங்கள் உள்ளன.
அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் தலைமையகம் உள்ள இந் நிறுவனத்தின்ஆண்டு விற்பனை 7 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications