ஆசிய அமெரிக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
வாஷிங்டன்:
வெளிநாடுகளில் பிறக்கும் அமெரிக்கர்களில் அதிகம் பேர் ஆசிய நாடுகளில்பிறப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதாவது வெளிநாடுகளில் பிறக்கும் 4 அமெரிக்கக் குழந்தைகளில் ஒன்று ஆசியநாடுகளில் பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் ஆசிய நாடுகளில் பிறந்தவர்களின்எண்ணிக்கை 2.58 கோடியாக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு சமீபத்தில்வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாட்டில் பிறந்த அமெரிக்கர்களின் மொத்த எண்ணிக்கையான 2.58 கோடியில்68 லட்சம் பேர் ஆசிய நாடுகளில் பிறந்தவர்களாகும்.
அமெரிக்கர்கள் அதிகம் பிறக்கும் ஆசிய நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது.அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவுக்குப் பிறகு தென் கொரியா,பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளில் அமெரிக்கர்கள் அதிகம் பிறக்கின்றனர்.
1990-ம் ஆண்டு கணக்குப்படி சீனாவில் பிறந்த அமெரிக்கர்களின் எண்ணக்கை 6.7லட்சம்பேர்தான். ஆனால், இந்த எண்ணிக்கை 1997-ல் 11 லட்சமாகஅதிகரித்துவிட்டது.
இந்தியாவில் 4.5 லட்சமாக இருந்த எண்ணிக்கை 7.48 லட்சமாக உயர்ந்துவிட்டது.
ஆசியாவில் பிறந்த அமெரிக்கர்களில் 45 சதவீதத்தினர் லாஸ் ஏஞ்சலீஸ், நியுயார்க்,சான் பிரான்ஸிஸ்கோ நகரங்களில்தான் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் பிறக்கும் அமெரிக்கர்களில் 4-ல் ஒருவர் ஆசியாவில் பிறக்கிறார்என்றாலும், 2 பேரில் ஒருவர் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.