பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 16 வது பட்டமளிப்பு விழா நடந்தது.

கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் இன்று (அக் 5) பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு கவர்னரும் வேந்தருமான பாத்திமா பீவி தலைமை வகித்தார்.

இந்தப்பட்டமளிப்பு விழாவில், 131 பேர் நேரடியாகப் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழகத்தின் கீழ், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தப்பட்டத்தைப் பெற்றனர்.

இது தவிர பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவு செய்துள்ள கல்லூரிகள் மூலமாக 22,000 பேர் பட்டம் பெறுகின்றனர். இவர்களுக்கு பட்டங்கள் அந்தந்தக் கல்லூரிகள் மூலமாகவோ, அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும். இதில், 178 பேர் டாக்டர் பட்டம் பெறுகின்றனர்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இளங்கோ, மற்றும் சிறப்பு விருந்தினராக முன்னாள் நீதிபதி சாரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+