இந்திய உணவு வகைகளை ஒரு கை பார்த்த புடின்
டெல்லி:
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்இந்திய உணவு வகைகளை மிகவும் ருசித்துச் சாப்பிட்டார்.
டெல்லியில் உள்ள மவுரியா ஷெரட்டான் ஹோட்டலில் தங்கிய அவர், மிகவும்சுத்தத்தைக் கடைப்பிடிப்பவர். தேர்ந்தெடுத்த உணவு வகைகளையே சாப்பிடுபவர்.
இந்தியப் பயணத்தில் பிடித்த உணவு வகைகளை ஒரு பிடிபிடித்து விட்டார்.
47 வயதான புடின், ரஷ்ய உளவுப் பிரிவில் பணியாற்றியுள்ளார். மேலும் ஜூடோவில்கறுப்பு பெல்ட் வாங்கியுள்ளார். இதனால், தனது உடல் நலனில் அக்கறை காட்டும்அவர் இந்தியப் பயணத்தில் தனது வழக்கமான உணவு முறையை சற்று மாற்றிக்கொண்டார்.
தான் விரும்பிய உணவு வகைகளை சமைத்துத் தரும்படி ஹோட்டல்சமையல்காரர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். உடல் நலத்துக்கு மசாலா கலந்தஉணவு வகைகள் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாட்டையும் மீறி மசாலா சேர்த்தஉணவு வகைகளை அவர் விரும்பிச் சாப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் மசாலாகலந்த உணவு வகைகளை அதிகம் விருப்பிச் சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மவுரியா ஹோட்டல் தலைமை சமையல்காரர் சுல்தான் முகைதீன் பிரத்யேமாகச்சமைத்துத் தந்த மாமிச உணவை அவர் மிகவும் விரும்பி ரசித்துச் சாப்பிட்டார்.
புடினுக்கும், அவரது மனைவுக்கும் 2 அடி உயரமுள்ள சாக்லேட்டை தயாரித்துக்கொடுத்து அவர்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார் சுல்தான் முகைதீன். அந்தசாக்லேட்டை கணவன், மனைவி இருவரும் விரும்பிச் சுவைத்தனர். புடினின் மனைவிஇனிப்பு வகைகளையே அதிகம் விரும்பிச் சாப்பிட்டார்.
ஓட்டல் உரிமையாளர்கள் புடினின் மனைவிக்கு தங்தக் கலரில் பட்டு சால்வையும்,புடினுக்கு ஸ்கார்ஃபும் பரிசளித்தனர்.
இந்த உபசரிப்பினால் மகிழ்ந்த புடினும் அவரது மனைவியும் பார்வையாளர்கள்புத்தகத்தில் எங்களை சிறந்த முறையில் உபசரித்தமைக்கு மிக்க நன்றி என எழுதிகையெழுத்திட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications