திமுக அமைச்சரின் இலாகா மாற்றம்: கருணாநிதி அதிருப்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஏ.ராஜா, தனக்கு ஒதுக்கப்பட்ட புதிய இலாகாவை ஏற்காமல் உள்ளார்.
சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்தார். புதிதாக சில அமைச்சர்கள் பதவியேற்றனர். சில அமைச்சர்களின்இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் ஒருவர்தான் ராஜா.
இலாகா மாற்றம் குறித்து திமுக தலைமையிடமோ அல்லது முதல்வர் கருணாநிதியிடமோ வாஜ்பாய் ஆலோசிக்கவிலலை என்று தெரிகிறது. இதையடுத்துதிமுக தரப்பு அதிருப்தியுடன் உள்ளது
இந்த நிலையில், புதிய இலாகாவை அமைச்சர் ராஜா இன்னும் ஏற்காமல் உள்ளார். முதல்வர் கருணாநிதி ஒப்புதல் கொடுத்த பிறகே அவர் புதிய இலாகாவைஏற்பார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications