40 சதவீத ஏர்இந்தியா நிறுவன பங்குகளை வாங்க டாடா குரூப் முடிவு
மும்பை:
மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்க டாடா குரூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. அதாவது ஏர் இந்தியா நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை தனியார்களுக்கு விற்க முடிவு செய்யப் பட்டது.
இந்த 80 சதவீத பங்குகளில் 40 சதவீதத்தை உள்நாட்டு நிறுவனங்களும், மீதமுள்ள40 சதவீத பங்குகளை வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும் விற்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்பை அடுத்து, ஏர் இந்தியாவின் 40 சதவீத பங்குகளையும் வாங்க டாடா குரூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத் தகவலை அந் நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனத்துடன் சேர்ந்துதான் ஏர் இந்தியாவின் பங்குகளை டாடா குரூப் நிறுவனம் வாங்கும். இந்தியாவின் பெரிய விமான நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடிவு செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் லாபத்தில் இயங்க வைக்கும் நடவடிக்கையில் பங்குகொள்வது குறித்து பெருமைப்படுவதாக ரத்தன் டாடா தெரிவித்தார்.
1953-ம் ஆண்டுதான் ஏர் இந்தியா நிறுவனம் தேசியமயமாக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாக்கள்தான் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications