தமிழகத்திலும் கொண்டாடப்படும் தசரா விழா
சென்னை:
கர்நாடகாவில் மைசூரைப் போல் தமிழகத்திலும் ஓரிடத்தில் தசரா திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்த விழா விமரிசையாக நடந்து வருகிறது.
இதன் முக்கிய நிகழ்ச்சியாக நாளை சனிக்கிழமை நடைபெறும் சூரசம்காரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
தசரா விழா, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்படுவதுவழக்கம். ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் விரதமிருந்து பல வேடங்களில் உடை அணிந்து வந்துஅம்மனை தரிசிப்பது தான் சிறப்பம்சம்.
இப்படி வேடமிட்டவர்கள் தாரை தப்பட்டையுடன் வீதி தோறும் சென்று உண்டியல் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை வசூல்செய்வார்கள். அந்த காணிக்கையை கடைசி நாளான நாளை சனிக்கிழமை கோவிலில் சேர்ப்பார்கள்.
இந்த ஆண்டு தசரா விழா செப்டம்பர் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குவந்து காப்பு கயிறு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலில் இறங்கினர்.
கோவிலில் தினமும் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பாட்டுக் கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பொதுவிருந்து, அன்னதானம், காவடி எடுத்தல், பால் குடம் பவனி போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தன.
நாளை சூரசம்காரத்தைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
நாளை காலை முதல் விடிய விடிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பதால் ஊரே அமர்க்களமாக காட்சி அளிக்கும். நள்ளிரவு12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்று மகிஷா சூரனைசம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.
சூரசம்காரம் முடிந்ததும் கடற்கரை மேடையில் அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை நடைபெறும். அடுத்த நாள் 8ம் தேதிஅலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் தசரா விழா நிறைவு பெறும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications