ஜப்பானில் பெரும் நிலநடுக்கம் - 12 பேர் காயம், கட்டடங்கள் சேதம்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ:

ஜப்பானில் வெள்ளிக்கிழமை காலை பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 505 கிலோமீட்டர் தென்மேற்கே உள்ளடோட்டோரி என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ரிச்டெர் அளவுகோளில் 7.1 என்று பதிவானது. இந்நிலநடுக்கத்தால் 12 பேர் காயமடைந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன.

பொதுச் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த 5 ஆண்டுகளில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே பெரியதுஎன்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. சாலைமற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின் சப்ளையும்துண்டிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இடிபாடிகளில் சிக்கியவர்களைமீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 12 பேர்தான் காயமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கம் பெரிய அளவான நிலநடுக்கம். ஆகவே, மீட்புப் பணிகள்முடிவடைந்தால்தான் உயிர்ச்சேதம் பற்றி உண்மை நிலவரம் தெரியவரும் என்றுமீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+