160 பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்கிறது இந்தியா
கராச்சி:
இந்தியா தான் பிடித்து வைத்துள்ள 160 பாகிஸ்தான் நாட்டு மீனவர்களையும், 18மீன்பிடி படகுகளையும் விடுதலை செய்ய உள்ளது பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.
டான் என்ற அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள அச் செய்தி விவரம்:
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த 160 மீனவர்கள்கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் சென்ற 18 மீன்பிடி படகுகளையும் இந்தியஅதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிப்பது தொடர்பாகஇந்திய அதிகாரிகளுடன் பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் இப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.இப் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டு கைது செய்துள்ள மீனவர்களையும்,படகுகளையும் விடுவிக்க இந்தியா ஒப்புக் கொண்டது.
இது தொடர்பான தகவல் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்துபாகிஸ்தானில் உள்ள மீனவர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு வந்துள்ளது.
மீனவர்களையும், படகுகளையும் மீட்டு வர சங்கத்தின் துணைத் தலைவர் ஷஃபிமுகம்மது ஜமோட் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அடுத்த வாரம் இந்தியாசெல்கிறது.
தற்போது இந்தியாவின் பிடியில் உள்ள மீனவர்களின் பாஸ்போர்ட்டுகள் மற்றும்அடையாள அட்டைகளை அவர்களது குடும்பத்தாரிடமிருந்து பெறும் முயற்சியில்மீனவர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று அந்த பத்திரிக்கை செய்திவெளியிட்டுள்ளது.
இந் நிலையில், மீனவர்கள் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,இந்தியச் சிறைகளில் 298 பாகிஸ்தான் நாட்டு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும்,44 மீன்பிடி படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இப்போது மீட்கப்படும் 160 மீனவர்களைத் தவிர மற்றவர்களையும் விரைவில் மீட்கநடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications