கொச்சி துறைமுகத்தில் ரூ.55 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பயணிகள் முனையம்
கொச்சி:
பெரிய பயணிகள் கப்பல்களையும் கையாளும் திறன் கொண்டதாக கொச்சிதுறைமுகத்தை மேம்படுத்தும் பணியை கேரள மாநில சுற்றுலாத் துறையும், கொச்சிபோர்ட் டிரஸ்டும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
இத் தகவலை கொச்சி போர்ட் டிரஸ்ட் தலைவர் ஜேகப் தாமஸும், கேரள மாநிலசுற்றுலாத் துறைச் செயலர் அமிதாப் காந்த்தும் தெரிவித்தார்.
இந்திய சுற்றுலா வரலாற்றிலேயே மிகப் பெரிய சுற்றுலா கண்காட்சி கொச்சி அருகேநடைபெற உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளைப் பார்வையிட வந்த அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கொச்சி துறைமுகத்தை மேம்படுத்தும் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கிழக்கு நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்குமான சர்வதேச கடல் மார்க்கதில்ஒரு முக்கிய துறைமுகமாக கொச்சியை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.உலகின் பெரிய, பெரிய பயணிகள் கப்பல்களையும் கையாளும் திறன் கொண்டதாககொச்சி துறைமுகம் மாற்றப்படும்.
அதற்காக கொச்சியில் கோல்ஃ மைதானங்களும், நீர் விளையாட்டு மையங்களும்,சர்வதேச பங்கரிங் டெர்மினல்களும் அமைக்கப்படும். ஒரு உலகத் தரம் வாய்ந்தபயணிகள் துறைமுகமாக கொச்சி விரைவில் மாற்றப்பட உள்ளது.
சுமார் ரூ. 55.5 கோடி செலவில் இந்தய பயணிகள் முனையம் அமைக்கப்படும்.மொத்தம் ஆகும் செலவில் கொச்சி போர்ட் டிரஸ்ட்டும் கேரள அரசு சரிபாதி அளவைஏற்றுக் கொள்ளும்.
இப்போதைய திட்டப்படி கொச்சி துறைமுகத்தில் உள்ள மட்டன்சேரி வார்ஃப்பகுதியில் பயணிகள் முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் இந்த முனையம் வல்லார்படம் கன்டெய்னர் ஏற்றி இறக்கும் பகுதிக்குமாற்றப்படும்.
கடந்த ஆண்டு கொச்சி துறைமுகத்துக்கு 23 பயணிகள் கப்பல்கள் வந்து சென்றன.இந்த ஆண்டு 50 கப்பல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கைஅடுத்த இரு ஆண்டுகளில் 100 ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றனர்அவர்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications