பெட்ரோல் விலை குறைப்பு பிரச்சனை: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மம்தா ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

Mamtha Banerjeeகல்கத்தா:

பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைப்பது குறித்த முடிவு எடுப்பதை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளதை அடுத்து தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய தனது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை மம்தா பானர்ஜி கூட்டி விவாதித்தார்.

வெள்ளிக்கிழமை இந்தக் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடந்ததால், அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து அரசுக்கு ஆதரவைத் தொடர்வதா, இல்லையா என முடிவு எடுக்கப் போவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மம்தாவின் ராஜினாமா முடிவுக்கு முழு அளவில் ஆதரவு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. மத்திய கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தன்னுடன் அமைச்சராக இருந்த அஜித் பாஞ்சாவையும் மம்தா ராஜினாமா செய்ய வைத்தார்.

மம்தாவின் நிர்பந்தத்தால் வேண்டா வெறுப்பாக அமைச்சர் பதவியைவிட்டு விலகினார் பாஞ்சா. மூட்டு அறுவை சிகிச்சை முடந்து வந்த பின்னர் பெட்ரோலிய விலைக் குறைப்பு குறித்து முடிவெடுப்பதாக பிரதமர் கூறியுள்ளார். எனவே, அதுவரை பொறுத்திருப்பது தான் நல்லது என பாஞ்சா கூறுகிறார்.


அக்டோபர் 05, 2000

  • பிரதமரின் அறுவை சிகிச்சைக்குக் காத்திருக்கும் காஸ்,
    மண்ணெண்ணெய் விலை!
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+