மதுரை அருகே ரூ. 20 லட்சம் நகை கொள்ளை
மதுரை:
மதுரை அருகே ஒரு அடகுக் கடையிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள்கொள்ளையடிக்கப்பட்டன.
இது பற்றி போலீஸார் கூறியதாவது:
மதுரை மாவட்டம் செக்கானூரணியைச் சேர்ந்தவர் குருசாமி நாடார். இவர்செக்கானூரணி - சோழவந்தான் சாலையில் குடும்பத்துடன் மாடி வீட்டில் வசித்துவருகிறார்.
மாடி வீட்டின் கீழ்ப் பகுதியில் ஒரு அடகுக் கடை, ஜவுளிக் கடை ஆகியவற்றை வைத்துநடத்தி வரும் அவர் குடும்பத்துடன் மாடியில் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் ஒருசமையலறையும் உண்டு.
அப்பகுதியில் பெரிய அடகுக்கடை இதுதான் என்பதால் சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த மக்கள் அவசரத் தேவைக்காக தங்களிடமுள்ள நகைகளை குருசாமி நாடாரின்அடகுக் கடையில் வைத்து பணம் பெற்றுச் செல்வார்கள்.
அந்த வகையில் அவரிடம் நிறைய நகைகள் அடகு வைக்கப்பட்டன. அடகுவைக்கப்பட்ட நகைகளை அவர் அடகுக் கடையில் வைக்காமல் கீழ்த் தளசமையலறைக்குள் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருந்தார்.
இந் நிலையில், புதன்கிழமை இரவு அடகுக்கடை, ஜவுளிக் கடை இரண்டையும்மூடிவிட்டு அனைவரும் மேல்தளத்தில் உள்ள வீட்டில் தூங்கச் சென்றுவிட்டனர்.
நடுஇரவில் கீழ் தளத்தில் யாரோ கதவை உடைக்கும் சத்தம் கேட்டு குருசாமியும்அவரது குடும்பத்தினரும் கீழே இறங்கி வந்து பார்த்தனர். அப்போது சமையலறையின்கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பாதுகாப்புப் பெட்டகமும்உடைக்கப்பட்டிருந்தது.
அதில் வைக்கப்பட்டிருந்த 450 சவரன் தங்க நகைகள், ரூ. 70 ஆயிரம் ரொக்கம்ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின்மொத்த மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணைநடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்துதடயங்களைப் பதிவு செய்தனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications