தமிழில் 3 தங்கப் பதக்கம் வென்ற ரஜினி ரசிகர்
மொடக்குறிச்சி:
ராகவேந்திரர் குறித்து ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, "படையப்பா ஸ்டைலில் வந்து, எம்.ஏ, தமிழ் பட்டப்படிப்பில் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் திரும்பினார் மொடக்குறிச்சி ஆன்மீக ரஜினி ரசிகர் மன்றத்தின்தலைவர் ஞானதீபன்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஞானதீபன். இவர் எம்.ஏ. தமிழ்ப் பாடத்தில் மூன்று தங்கப்பதக்கங்களை இந்த மாணவர் வென்றுள்ளார்.
பாரதியார் பல்கலைக் கழகம் வழங்கும் ஒரு தங்கப் பதக்கம், மாரிமுத்து அறக்கட்டளை மற்றும் சிற்பிஅறக்கட்டளை சார்பாக இரண்டு தக்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
வியாழக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பாத்திமா பீவியிடமிருந்து இந்த பதக்கங்களை இவர்பெற்றுக் கொண்டார்.
சிறு வயது முதலே ரஜினியின் மீது அளவு கடந்த பிரியம் கொண்ட ஞானதீபன், சிக்கண்ணா நாயக்கர் கல்லூரியில்பி.ஏ. தமிழ் படித்தார். இதிலும் முதலிடம் பெற்றார். பின்னர் இதே கல்லூரியில் தனது எம்.ஏ.படிப்பைத் தொடர்ந்தஇவர், தனது ஆய்வுக் கட்டுரைக்காக ஸ்ரீ ராகவேந்திரர் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.
வியாழக்கிழமை பட்டம் பெற வந்தபோது தனது ரசிகர் மன்ற படையுடன் "படையப்பா வாக வந்து பல்கலைவளாகத்தை கலகலக்க வைத்து விட்டார்.
இவர் கூறுகையில், "நான் தற்போது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் "சித்த மருத்துவப் பாடல்களில் மருத்துவக்குறிப்புகள் என்ற தலைப்பில் பி.எச்.டி பட்டம் பெற ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன்.
எம்.ஏ. தமிழில் மூன்று பதக்கங்களை வென்றதில் மகிழ்ச்சியடைகிறேன். ரஜினி ராகவேந்திரரின் பக்தர், நானும்ராகவேந்திரரின் ரசிகன். எனவே பாடத்திட்டத்தில் ஆய்வுக்கு ராகவேந்திரரையே தேர்வு செய்தேன்.
கன்னடநடிகர் ராஜ்குமார் கடத்தல் பிரச்னைக்கு பின்னர் தங்க மெடல்களுடன் சென்று ரஜினியின் ஆசியைப் பெறஉள்ளேன் என்றார்.
டாக்டர் ஆப் சயின்ஸ் வென்ற விவசாயி: கர்நாடக மாநிலம், பாகல்பூரைச் சேர்ந்தவர் ஹேசா கவுடர் (45). இவர்விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாரதியார் பல்கலைக் கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில் டி.எஸ்சிபட்டம் பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே.
இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள பாலோடு என்ற இடத்தில், "டிராபிகல் பொட்டானிக் கார்டன் ரிசர்ச்இன்ஸ்டியூட்டில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
மேலும், இவர் "இன்டியன் பைட்டோபேத்தலாஜிகல் சொசைட்டி, அமெரிக்கன் பையோகிராபிகல் இன்ஸ்டியூட்,நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் ஆகியவற்றில் உறுப்பினராகவும் உள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications