ஆதித்தனுக்கு மூலிகை ராமர் போட்ட நாமம்
சென்னை:
மூலிகை பெட்ரோல் ராமரிடம் ஏமாந்த முன்னாள் த.மா.கா. அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் போலீசில் புகார் செய்ய முடிவுசெய்துள்ளார்.
இதோ மூலிகையில் இருந்து பெட்ரோல் என்று சொல்லிய மூலிகை ராமர் பிள்ளையிடம் ஏமாந்தவர்கள் ஏராளம். அவர்தயாரிப்பது ரசாயன பொருட்கள் கலந்த மோசடியான, மோசமான பெட்ரோல் என்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தனர்.
ராமர் பிள்ளையுடன் பிசினசில் கூட்டாளி ஆனால், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என வாயை பிளந்த பல முக்கிய பிரபலங்கள்அவருக்கு நிதி உதவி செய்தனர்.
அதில் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனும் இருக்கிறார் என்பது தான் இப்போதைய தகவல். மூலிகை ராமர் மீதுமோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுக்கி சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ராமருக்கு எதிராக சாட்சி சொல்லப்போகிறார் ஆதித்தன்.
தமிழ் மாநில காங்கிரஸ் முக்கிய புள்ளிகளில் ஒருவரான ஆதித்தன் கூறுகையில், நான் குஜ்ரால் அரசில் மத்திய அமைச்சராகஇருந்தபோது என்னை ராமர் பிள்ளை தொடர்பு கொண்டார். பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகைகளை கொண்டு பெட்ரோல்தயாரிப்பதாக கூறினார்.
தனது ஆராய்ச்சியை தொடர உதவி செய்யுமாறு கேட்டார். அவரது கண்டுபிடிப்பு அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்டால் நாட்டுக்குஏராளமான அந்நிய செலாவணி மிச்சமாகும். மேலும் ஒரு தமிழன் உலக அளவில் புகழ் பெறுவானே என்ற எண்ணத்தில் ராமர்பிள்ளைக்கு பண உதவி செய்தேன்.
ஆனால், ரசாயன பொருட்களை கலந்து மூலிகை பெட்ரோல் என்று ராமர் மோசடி செய்துள்ளார். என்னை ஏமாற்றி பணம் வாங்கியராமர் பிள்ளை மீது போலீசில் புகார் செய்வேன் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications