ரங்கராஜன் இறந்தது ""நான்-ஹாட்ஜ்ஹின்ஸ் லிம்ஃபோமா"" நோயால்தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் நான்-ஹாட்ஜ்ஹின்ஸ்லிம்ஃபோமா என்ற நோயால்தான் இறந்தார் என்று அவரது மரணம் குறித்து விசாரித்தவிசாரணை கமிட்டி தெரிவித்துள்ளது.

மத்திய மின் துறை அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் மையமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், சுயநினைவற்று கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்நினைவு திரும்பாமலேயே இறந்தார். அவரது மரணத்துக்கு ரத்தப் புற்றுநோய்தான் காரணம்என்று கூறப்பட்டது.

இந் நிலையில், அகில இந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில்சேர்க்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ரங்கராஜனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டபோதுஅவருக்கு ரத்தப் புற்றுநோய் இருந்தது கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்படவில்லை.இதுதான் அவரது மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

அப்பல்லோ மருத்துவமனை மீது கூறப்பட்ட இக் குற்றச்சாட்டை அந்த மருத்துவமனைநிர்வாக இயக்குநர் பிரதாப் சி. ரெட்டி உள்பட மற்ற உயர் தலைவர்களும் மறுத்தனர்.

எங்களிடம் ரங்கராஜன் குமாரமங்கலம் சிகிச்சைக்கு வந்தபோது அவருக்கு ரத்தப்புற்றுநோய் இல்லை என்றும், அவருக்கு சாதாரண காய்ச்சல்தான் இருந்தது என்றும்அப்பல்லோ மருத்துவமனை விளக்கமளித்தது.

இதையடுத்து ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மரணத்துக்கு உண்மை காரணத்தை அறியும்பொருட்டு டாக்டர் சி.பி. சிங் தலைமையில் விசாரணை கமிட்டி நியமிக்கப்பட்டது.

இக் கமிட்டி விசாரணை நடத்தி ரங்கராஜன் குமாரமங்கலம் இறந்தது நான்-ஹாட்ஜ்ஹின்ஸ்லிம்ஃபோமியா என்ற நோயால்தான்.

மரணத்துக்கு முன் அவருக்குச் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையும், அகிலஇந்திய மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையும் அந் நோயைக் கண்டுபிடித்துசிகிச்சை அளிக்கத் தவறிவிட்டன என்று அக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதையடுத்து ரங்கராஜன் மரணத்தில் புது திருப்பமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.அதுதவிர இச் சம்பவம் மேலும் சிக்கலாகியுள்ளது.

இதற்கிடையே கமிட்டி அறிக்கையில் தன்னைப் பற்றி தவறான தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அது பற்றி விசாரிக்கும்படியும் மத்திய சுகாதார நலத்துறைஅமைச்சருக்கு ரங்கராஜனின் மனைவி கடிதம் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+